* சீனாவில் சமீபகாலமாக பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு அதிக அளவில் ஆளாவதாக காவல்துறைக்கு புகார்கள் குவியத் தொடங்கி, . எதிராக எடுத்த எந்த நடவடிக்கையும் பயன்தராமல் கடைசியாக ஆய்வு செய்து அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தது.

பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்குப் பெண்கள் ஆளாவதைத் தடுக்கும் வகையில் பெண்கள் கவர்ச்சிகரமான உடைகளான ஸ்கர்ட், லெகின்ஸ், உடல் அமைப்பை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்பதே சீனப் பெண்களுக்கு சீனப் போலீசார் விடுத்த எச்சரிக்கை.

* ஆஸ்திரேலியாவில் குட்டைப்பாவாடை அணிந்து சென்ற மாணவிகள் பேருந்தில் ஏறுவதை பேருந்துப் படிகளில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் படம் பிடித்த பேருந்து ஓட்டுநரை ஆஸ்திரேலியப் போலீசார் கைது செய்து வழக்குத்தொடர்ந்து அவருக்கு 7மாத சிறைத்தண்டனை கொடுத்த சம்பவமும் சிலமாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

* அரியானாவில், மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியர், குட்டைப் பாவாடை அணியத் தடை விதிக்க வேண்டும்' என, மாநிலக் கல்விக் குழு அதிகாரியை, அம்மாநிலத்தின் மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டது.

* திருமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தவும் ஜீன்ஸ் அணியவும் தடைவிதிக்கக் கோரி பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்திய சம்பவமும் சென்ற வாரம் பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* மத்தியப் பிரதேச பா.ஜ.க. துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான ரகுநந்தன் சர்மா கடந்த வாரம்,
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெண்கள் திருமணத்திற்கு முன் மொபைல் போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார். அவருக்கு கண்டனக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் பறந்தன.

* மும்பை மாநகராட்சியின், 121வது வார்டு உறுப்பினர், ரிது தாவ்டே (39). பாரதிய, ஜனதாவைச் சேர்ந்த இவர், செல்லும் பாதையில், பெண் பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தாமல், அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். துணிக் கடைகள் மற்றும் நடைபாதைக் கடைகளில், பெண் பொம்மைகளை வைத்திருப்பதைப் பார்ப்பதால், ஆண்களிடம் பாலியல் வக்கிரம் வெளிப்படுகிறது. எனவே, உள்ளாடை விற்பனை கடைகளில் வைக்கப்பட்டிருக்கும், பெண் பொம்மைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, மும்பை மாநகராட்சியில் இவர் மற்றும் 227 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

இந்தக்கருத்தை இஸ்லாம் கூறும் கட்டளையாகச் சொன்னபோது இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது; அவர்களைச் சித்ரவதை செய்கின்றது; பெண்களை பர்தா அணியச் சொல்லும் இவர்கள் பழமைவாதிகள்; அடிப்படைவாதிகள்; பிற்போக்குவாதிகள்; காட்டுமிராண்டிகள் என்று கதையளந்தனர் இஸ்லாமிய எதிரிகள். ஆனால் தற்போது நிலை என்ன?

யார் தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டார்களோ அந்த முற்போக்கு(?)வாதிகளது வாயிலிருந்தே இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை அல்லாஹ் வழிமொழிய வைத்துள்ளான்.

சீனக் காவல்துறை இந்தச் சட்டத்தை கொண்டுவரும் என்று யாரும் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

இஸ்லாத்தை இழிவுபடுத்துவதையே முழுமுதற் குறிக்கோளாகக் கொண்டுள்ள பா.ஜ.க.வினரது வாயிலிருந்தே பர்தாவின் அவசியத்தை இறைவன் விளங்க வைத்துள்ளான்.

1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர் ஆன் தெளிவுபடுத்தியுள்ளதைப் பாருங்கள் :

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். அல்குர் ஆன் 33 : 59

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts