
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மூன்று பிரதி அமைச்சர் பதவிகள் வழங்குமாறு அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக
நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அவ்வாறில்லாவிட்டால் தனது கட்சிக்கு பிரதி அமைச்சர் பதவி தேவையில்லை எனவும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சரவையில் நாளை வியாழக்கிழமை மாற்றம் செய்யவிருப்பதாகவும் அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு பிரதி அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு அமைச்சர் ஹக்கீம் அமெரிக்கா பயணமானார்.
இந்த விஜயத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டதாகவும் இதன்போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
தனது கட்சிக்கு இரண்டு பிரதி அமைச்சர் பதவி தேவையில்லை என்றும் பிரதியமைச்சர் பதவிகளை வழங்குவதாயின் மூன்று பிரதி அமைச்சு பதவி வழங்குமாறும் கோரிக்கைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(tamilmirror)
0 கருத்துகள்: