பிரதி அமைச்சர்களாக 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தபால் சேவைகள் பிரதியமைச்சராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்க்ஷ்மன் வசந்த பெரேரா கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
தொழில் பிரதியமைச்சராக சரத் வீரசேகரவும், விவசாய பிரதியமைச்சராக வை.ஜீ.பத்மசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தவிர, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதியமைச்சராக ஹேமால் குணசேகரவும், தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி பிரதியமைச்சராக விக்டர் பெரேராவும் பொறுப்புகளை பெற்றுக்கொண்டனர்.
பிரதி கல்வியமைச்சராக மொஹான் லால் கிரேருவும், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு பிரதியமைச்சராக நிஷாந்த முத்துஹெட்டிகமவும், புனர்வாழ்வு மற்றும்செறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக சரத் முத்துகுமாரனவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

0 கருத்துகள்: