ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அந்த கட்சியின் ஐக்கிய பிக்கு முன்னணி விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் காலஅவகாசம் கேட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னணி அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த கோரிக்கையை முன்வைத்ததாக ஐக்கிய பிக்கு முன்னணியின் செயலாளர் சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
ரணிலை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை விடுத்ததுடன் 7 முதல் 9 உறுப்பினர்களை கொண்ட சபை ஒன்றிடம் தலைமைத்துவத்தை ஒப்படைக்குமாறும் கேட்டுள்ளோம். ரணில் விக்ரமசிங்கவும் அந்த குழுவில் ஒரு உறுப்பினராக இருப்பார் எனவும் சுமங்கள தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய பிக்கு முன்னணி எதிர்க்கட்சித் தலைவருடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் முன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜெயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தது

0 கருத்துகள்: