கொழும்பு : ஹஜ்ஜையும் அரபாவையும் தீர்மானிக்கும் துல்ஹஜ் பிறையை இலங்கையில் பார்க்கும்படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் மக்களை கோரியமை நபியவர்களின் சொல்லுக்கு மாற்றமானதாகும் என அகில இலங்கை உலமா கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம்களின் இரண்டாவது பெருநாளான ஹஜ்ஜுப்பெருநாள் என்பது மக்காவில் ஹாஜிகள் மேற்கொள்ளும் கிரியைகளை மையமாக வைத்ததாகும். அத்துடன் ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடும் தினமான அரபா நாளில் ஹாஜிகள் அல்லாத முஸ்லிம்கள் நோன்பு வைக்கும்படி நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
இதன்படி அரபாவில் ஹாஜிகள் கூடும் நாளிலேயே நோன்பு பிடிக்க வேண்டுமே தவிர நாட்டுக்கு நாடு அரபா தினங்களை உருவாக்கும் படி நபியவர்கள் கற்றுத்தரவில்லை. இந்த நிலையில் மக்காவில் எந்த நாளில் ஹாஜிகள் கூடும் அரபா தினம் வருமோ அதனை அதற்கு எட்டு நாட்களுக்கு முன்னரே இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் தெரிந்து கொள்ளக்கூடிய அளவு இன்று தொழில் நுட்ப வசதிகள் மிக அதிகமாகவே உள்ளன. அதன்படி அரபா நோன்பை அரபா நாளில் பிடிக்கும் படியும் அதற்கு மறுநாள் ஹஜ் பெருநாள் கொண்டாடும்படியும் இலங்கை முஸ்லிம்களிடம் சொல்வதே இஸ்லாத்தை தெளிவாக புரிந்தவர்களின் செயலாக இருக்கும். இதனை விடுத்து இலங்கையில் பிறை பார்க்கும்படி சொன்னதானது இஸ்லாமிய மார்க்கத்தை கொச்சைப்படுத்துவதாகவும், இஸ்லாம் நிர்வாக இயந்திரத்தை இயக்க முடியாத மார்க்கமாகவும் காட்டப்பட்டுள்ளது.
நபியவர்கள் காலத்தில் பிறை கண்ட செய்தி இன்னொரு ஊருக்கு தெரியப்படுத்த வேண்டுமாயின் சில நாட்கள் செல்லும் என்பதை கருத்திற்கொண்டு அன்றைய நிலைமைக்கு ஏற்ப தீர்வை நபியவர்கள் வழங்கினார்கள். அதே வேளை பிறை 9ம் நாளில் நோன்பு பிடிக்க சொல்லாமல் அறபா நாளில் நோன்பு பிடிக்க சொன்னமை மூலம் இஸ்லாம் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதையும் நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளர்கள். அதன்படி மக்காவில் அரபா எந்நாளோ அந்நாளையே முஸ்லிம்கள் அரபா தினமாக கருத வேண்டும்.
இது பற்றி கடந்த பல வருடங்களாக நாம் பகிரங்கமாக சொல்லி வருகிறோம். ஆனால் உலமா சபை இது விடயத்தை சரியாக ஆராயாமல் இருப்பது கவலைக்குரியதாகும். அதே போல் இது விடயத்தில் ஸ்ரீ. தவ்ஹீத் ஜமாஅத்தும் நபியவர்களுக்கு முரணாக செயற்பட்டுள்ளது.
சூரியனை பாhத்து தொழுகை நேரங்களை தீர்மானிக்க வேண்டும் என்றிருக்க கலண்டரையும், நேரத்தையும் பார்த்து இன்று நாம் தொழுகின்றோம். அதே போல் மக்காவில் காணும் பிறையை நவீன சாதனங்கள் மூலம் மிக இலகுவாக தெரிந்து கொள்ள முடியும் என்றிருக்க இன்னமுமு; இது விடயத்தில் பிடிவாதம் பிடிப்பது அள்ளாஹ்வுக்கு அஞ்சிய செயலாக இருக்க முடியாது. இது விடயத்தை எவருக்கும் எப்போதும் தெளிவு படுத்;த நாம் தயாராகவே இக்கின்றோம்.
எனவே இலங்கை முஸ்லிம்கள், மக்காவில் ஹாஜிகள் அரபா தினத்தில் ஒன்று கூடும் நாளில் நோன்பு நோற்று நபி (சல்) அவர்களின் கூற்றுக்கிணங்க நன்மைகளை பெற முயற்சிக்கும்படி அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொள்கிறது என அதன் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மதனி தெரிவித்தார்

0 கருத்துகள்: