கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்போது அவரது வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில்
பெருந்தமணி ரத்தக்குழாய் வால்வில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அக்குழந்தை பிறந்த பிறகு மூச்சுதிணறல் உள்ளிட்ட இருதய நோயினால்
அவதிப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும், மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும்
நிலையும் இருந்தது.
எனவே வயிற்றுக்குள்ளேயே குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து வயிற்றில் வளரும் குழந்தைக்கு மிக மயிரிழையால் ஆன வயர்
மற்றும் மிக மெல்லிய ஊசி போன்றவற்றின் மூலம் துல்லியமாக அறுவை சிகிச்சை
நடத்தப்பட்டது.
அமெரிக்க மருத்துவர்களால் நிகழ்த்தப்பட்ட இது, மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
Click Hear
For
0 கருத்துகள்: