ஜாதிக ஹெல உறுமய பௌத்த பிக்குகளை அடிப்படையாக கொண்ட கட்சி என்பதால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க துறவறம் பூண்டு புதிய பௌத்த பீடம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார யோசனை முன்வைத்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் பதவியை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பெறுபேற்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னை ஆளுநராக்க யோசனை முன்வைக்கும் சம்பிக்க ரணவக்கவை நான் துறவறம் பூணுமாறு கோரினால் அதனை அவர் செய்யவாரா?. நானும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர், சம்பிக்க ரணவக்கவும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார். அப்படியானவர் இவ்வாறு பேசுவது சரியானதாக இருக்காது.
ஜாதிக ஹெல உறுமய பௌத்த பிக்குகளை அடிப்படையாக கொண்ட கட்சி என்பதால் சம்பிக்க ரணவக்கவை துறவறம் பூண்டு புதிய பௌத்த பீடத்தை ஆரம்பிக்குமாறு நான் கூறினால் அது தவறான பேச்சு. அவர் அப்படி நினைத்தால் நானும் அப்படி எண்ண முடியும். தமது கொள்கை மற்றும் பங்கு என்ன என்பதை அவரவர் புரிந்து கொள்ள வேண்டும். நான் எனது கொள்கை மற்றும் பங்கை புரிந்து வைத்துள்ளேன். ஜாதிக ஹெல உறுமயவின் இந்த பேச்சு மூடத்தனமானது என்றார்.

0 கருத்துகள்: