எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி கல்முனையில் பொதுபல சேனாவின்
பொதுக்கூட்டம் நடைபெறுமென அதன் செயலாளர் ஞானசார தேரர் பதுளையில் நடைபெற்ற
கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தல் விடுத்துள்ளார்.
.
இதுகுறித்து ஞானசார தேரர் பதுளையில் உரையாற்றுகையில் மேலும்
தெரிவித்தாவது; நாங்கள் கல்முனைக்குச் செல்லவிருந்தோம். ஆனால், எங்களது
இராணுவ அதிகாரிகள், தற்போதைக்கு அங்கு வரவேண்டாம் என்று மண்டியிட்டு
வேண்டிக் கொண்டார்கள். அவர்களை அசௌகரியத்தில் மாட்டிவிடக்கூடாது என்ற
காரணத்தால் நாங்கள் கல்முனைக்கு செல்வதை சற்று காலம் தாழ்த்தியுள்ளோம்.
.
ஆனால் எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி தீகவாபிக்குச் சென்று அடுத்த
நாள் 07ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கல்முனை நகரில் பொதுபல சேனா
பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதை இங்கு அறிவித்துக் கொள்கிறோம். அத்துடன்
நாங்கள் காத்தான்குடிக்கும் விரைவில் செல்லவுள்ளோம்.
.
அண்மையில் நாங்கள் அம்பாறைக்குச் சென்றோம். அங்கு வந்த கல்முனை தமிழ்
சகோதரர்கள் எங்களை கல்முனை பகுதிக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கல்முனையில் வாழும் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் அவர்கள்
துன்புறுத்தப்படுவதாகவும் அப்பிரதேசத்திலிருந்து நாளுக்குநாள்
துரத்தப்படுவதாகவும் முஸ்லிம்களின் அடிப்பட வாத செயற்பாடுகளிளிருந்து அந்த
தமிழ் சகோதரர்களை பாதுகாத்துக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்போ, பிள்ளையானோ,
தமிழ் அரசியல்வாதிகளோ தேவையில்லை.
.
பொதுபல சேனா மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. ஆகவே, நீங்கள் கல்முனை
பகுதிக்கு வாருங்கள். உங்களுக்கு காரியாலயங்களை நடத்த நாங்கள் எங்களது
வீடுவாசல்களை தருகின்றோம் என்று கூறி எங்களை அழைக்கின்றார்கள் என மேலும்
தெரிவித்தார்.
.
ஆனால், கல்முனையில் பொதுபல சேனா கூட்டம் நடத்தவிருந்தபோது அங்குள்ள
பலத்த எதிர்ப்பினால் அக்கூட்டம் கைவிடப்பட்டது. யார் தடுத்தாலும்
கல்முனையில் கூட்டம் நடத்தியே தீருவோமென பொதுபல சேனாவின் நிறைவேற்று
அதிகாரி டிலந்த விதானகே உறுதிபட தெரிவித்திருந்தார்.
.
பின்னர் எழுத்த எதிர்ப்பலைகளினால் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டு,
அவர்களை அம்பாறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து
டிலந்த விதானகேயிடம் கேட்டபோது, கல்முனையில் கூட்டம் நடத்தும் எண்ணம்
எங்களுக்கு இல்லவே இல்லையென்று அடியோடு மறுத்துவிட்டார். இந்நிலையிலேயே
பொதுபல சேனா மறுபடியும் கல்முனையில் கூட்டம் நடத்தவுள்ளதாக அறவித்துள்ளது.
.
(நெற்றிக் கண்ணன்) – நவமணி
0 கருத்துகள்: