ஹஜ்
புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் புனித பயணிகள் தங்களுடைய பயணத்தை இந்த
ஆண்டு இறுதி வரை ஒத்தி வைக்குமாறு சவூதி அரேபியா அரசு வேண்டுகோள்
விடுத்துள்ளது. சவூதி அரசின்
அறிவிப்பு குறித்து அங்குள்ள ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி: மக்காவுக்கு
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து
வருகிறது. இதனால் ஏற்படும் கூட்ட நெரிசல், அசம்பாவிதம் ஆகியவற்றைத் தடுக்க
அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வெளிநாட்டு
யாத்ரிகர்களின் எண்ணிக்கையை 20 சதவீதமும் உள்நாட்டு யாத்ரிகர்களின்
எண்ணிக்கையை 50 சதவீதமாகவும் குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது. மேலும்
மக்காவில் உள்ள பெரிய மஸ்ஜிதை மேலும் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று
வருகிறது.
இதனால் ஹஜ் மற்றும் உம்ரா வழிபாடுகளுக்காக மக்கா வரும்
புனித பயணிகள் தங்களுடைய பயணத் திட்டத்தை இந்த ஆண்டு இறுதி வரை ஒத்தி வைக்க
வேண்டும் என சவூதி வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 கருத்துகள்: