அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார
வைத்தியசாலையில் இரு பிரிவுகளாக பிளந்த இரண்டு வயது குழந்தையின் ஆண்
உறுப்பு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டு
வைத்தியத்துறையில் சாதனை செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது,
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு
வயது குழந்தை அங்கு வைக்கப்பட்டிருந்த மின் இயக்கத்தில் துளையிடும்
கருவியைக் கையில் எடுத்து தவறுதலாக இயக்கிய போது ஆண் உறுப்பு இரண்டாக
பிளந்துள்ளது.
இதனையடுத்து அக்கரைப்பற்று ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக டாக்டர் ஜெமில்
தலைமையில் இயங்கிய வைத்தியக் குழுவினர் 1 1/2 மணிநேர பிளாஸ்ரிக்
சத்திரசிகிச்சையை மேற்கொண்டு சாதனை செய்துள்ளார். தற்போது குழந்தை நலமாக
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது. சத்திர சிகிச்சை நிபுணர்
ஜெமிலின் அயராத முயற்சியை வைத்தியசாலையில் பணிப்பாளர் எம்.எம்.தாஸீம்
பாராட்டியுள்ளார்.
0 கருத்துகள்: