ரஷ்ய
தூதரக நிர்மாணப் பணிகளுக்காக கொழும்பு -07 பெளத்தாலோக்க மாவத்தை-
அஷ்ரப் நகர் மஸ்ஜிதுல் நூர் ஜும்ஆ பள்ளிவாசலை அங்கிருந்து
அகற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக
பள்ளிவாசலின் உதவிச் செயலாளர் எம்.எச்.எம்.பவாஸ் தெரிவித்தார்.
குறித்த இடத்தில் தற்போது ரஷ்ய தூதரக கட்டுமான பணிகள்
இடம்பெற்றுவருகின்றது. அதன் விஸ்தரிப்புக்காக பள்ளிவாசல்
அகற்றப்படுவதுடன் அருகில் உள்ள சில வீடுகளையும் பாதுகாப்புக்காக
அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் பள்ளிவாசல் அகற்றுதல் குறித்த எந்தவொரு உத்தியோக
பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என
பள்ளிவாசல் உதவிச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இவ்வாறு பள்ளிவாசலை அகற்றுவதற்கான முயற்சிகளை எதிர்த்து நாம்
கையெழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளோம். கடந்த இருவார காலமாக ஜும்
ஆத் தொழுகைகளை தொடர்ந்தும் இடம்பெற்ற இக்கையெழுத்து வேட்டையை
நாளையும் தொடரவுள்ளோம்.
இந்த பள்ளிவாசலை அங்கிருந்து
அகற்றி கொழும்புக்குள் வேறு இடத்தில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக
நகர அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவிக்கின்றார்கள். இதனை
இங்குள்ள மக்கள் விரும்ப வில்லை. இதே இடத்தில் தான் பள்ளிவாசல்
இருக்கவேண்டும் என்றார்.
குறிப்பிட்ட பள்ளிவாசல் ஜமாஅத்தில்
216 வீடுகள் உள்ளன. நிர்வாகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட
குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அருகில் உள்ள அலுவலகங்களில்
பணிபுரிபவர்களும் பீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்களும்
தொழுகைக்கு இந்த பள்ளிவாசலையே பயன்படுத்துகின்றனர்.
அஷ்ரப் நகர் மஸ்ஜிதுந்நூர் ஜும்ஆ மஹால் மத்ரஸாவானது 80 வருடங்கள்
பழமை வாய்ந்ததாகும். ஆரம்பத்தில் சிறிதாகவும் ஓலைக் குடிசையாகவும்
இருந்த பள்ளிவாசல் தற்போது வசதிக்கேற்ப விஸ்தரித்து
நிர்மானிக்கப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு பீ.பி. உம்மா என்
பவரால் இவ்விடம் வக்பு செய்யப் பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு பள்ளி வாசல்
வக்பு சபையில் (R149C142) பதிவு செய்யப்பட்டு 1983 ஆம் ஆண்டு இங்கு ஜும்ஆ
தொழுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: