நுவரெலியா, சீதா-எலிய பகுதியில் பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளான சம்பவத்தில் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த எம். எனும் சைனுலாப்தீன்ஆசிரியரும் மரண மாகியுள்ளதாக தெரியவருகிறது.
பதுளையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற நமுணுகல வித்தியாலய சுற்றுலா பஸ்வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பஸ்ஸில் 91 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் காயமடைந்த 80 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து இன்று புதன்கிழமை மாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பஸ் வண்டியானது பாதையை விட்டு விலகிச்சென்று பள்ளத்தில் வீழ்ந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில், பாலகிருஷ்ணன்(பெற்றோர்), பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த எம். சைனுலாப்தீன் (ஆசிரியர்), சுனில் சாந்த( சாரதி), பாரதிராஜா( நடத்துடனர்) ஆகிய நால்வருமே பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி ceylonmuslims

0 கருத்துகள்: