முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மதின் 93வது பிறந்த தினம்

உணரமறந்த உண்மைகள் அநீதமானதாக இருந்தாலும் இந்த அறிஞர்கள் முண்டியடித்து ஒத்தூதுவார்கள்.
நீண்ட ஆயுள் வேண்டி பிக்குகள் பிரித் ஓத ஜம்மியத்துல் உலமாதலைவர்
ரிஸ்வி முப்தி தலைமைதாங்கினார் !!!!தட்டிகேட்கவேண்டியவர்
தட்டிக்கொடுத்தார் ஹராம் ஹலால் அனுமதுயுடன் இனிதே நடந்தது
உண்மையை உணர மறந்த உலமாசபை தலைவர் முஸ்லிம் சமூகத்தை
தட்டி கேட்கும் தகுதியை இழந்து நிற்கும் கோலம் !!!!!
வரதட்சனை திருமணங்கள் ஆடம்பர நிகழ்ச்சிகள் ஆகுமாக்கப்படாத
கூட்டங்க்கல் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உலமாக்கள் தலைமை தாங்குவதால்
அவை ஹலால் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்கின்றன
ஜனாப் ரிஸ்வி முப்தி குழுவினர் கும்மாளத்துடன் செய்த நீதித் தவறிய செய்கையின் தவறுகளில் கட்டாயமாக பங்கேற்றுக் கொள்ள இலங்கை முஸ்லிம் சமூகம் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கின்ற சூழல் உருவாகியிருக்கிறது.
தாம் செய்த தவறை உணர்ந்துக் கொள்ளும் அறிவில் ஜனாப் ரிஸ்வி முப்தியோ அல்லது அவரது அடிவருடி லெப்பைமார்களோ இல்லை.
இதன் பிறகாவது இலங்கை முஸ்லிம்கள் தமதிருப்பைத் தக்கவைக்கும் நடவடிக்கைகளில் சுயமாக முடிவெடுக்கும் நிலைமைக்கு தமது அறிவை உபயோகிக்க வேண்டுமென்று நாம் தயவுடன் வேண்டுகிறோம்.
அநியாயக்கார மதகுருமார்களுடன் ஒன்றாக அவர்களது அநியாயங்களுக்குத்
துணை நிற்பதும், சுயநல அரசியல் தலைமைகளுக்கு துணை நிற்பதும் நமது சமூகத்தின் எதிர்கால தன்னிருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துப் போகும்.
இன்று நாம் அறிந்தே அனுமதிக்கின்ற செய்கைகள்தான் நம்மை அறியாமலே நமது நாளைய நாளை தீர்மானிக்கப் போகிறது.
எங்களது அறியாமையை தெளிவு படுத்த முன்வராத ACJU அமைப்பினரின் செய்கையில் அவர்களது சுயநலம் பொதிந்திருக்கிறது.
இந்நிலையில் முஸ்லிம்களின் தலைமைத்துவ தகுதிக்கு தமது குழுவினர் கிஞ்சித்தும் தகுதி இல்லை என்ற விடயத்தை இப்படி பிரசித்தமாக வெளிப்படுத்திய துணிச்சலான செய்கைக்கு என்ன சொல்ல முடியும்?
அவர்களின் துணிச்சலான முரண்பட்ட அந்த செய்கைக்கு நமது வாழ்த்துக்கள்.

1 2 3 4 DSC00591 DSC00592

1 கருத்துகள்:

Muaadh சொன்னது…

ரிஸ்வி முப்தியையோ ஜம்- இய்யத்துல் உலமாவையோ காப்பாற்ற வேண்டும் என்ற தனிப்பட்ட எந்தத் தேவையும் எமக்கில்லை. ஆனாலும் நீங்கள் ஒன்றைச் சொல்லும் போது தகுந்த ஆதாரத்தொடோ சொல்ல வேண்டும். தேரர்கள் பக்கத்தில் ரிஸ்வி முப்தி அமர்ந்திருப்பதை காட்டி பிரித் ஓதும் சபைக்கு ரிஸ்வி முப்தி தலைமை தாங்கினார் என கதை பறத்துவது அபாண்டம். பிரித் ஓதும் சபையில் ரிஸ்வி முப்தி அமர்ந்து தலைமை தாங்குகுவது போன்ற ஆதாரம் இருந்தால் அதற்கான காணொளியை (Video ) வை இணைத்து விட்டு பின்பு விமர்சியுங்கள். தேரர் பக்கத்தில் உர்காந்திருப்பது தவறென்றால் உங்களுக்கு Bus இல் பயனிக்கவோ, பொது இடங்களில், வைத்தியசாலைகளில் அமர்ந்திருக்கவோ முடியாது.ஏனெனில் அங்கெல்லாம் தேரர்கள் உங்கள் பக்கத்திலே வந்து அமர இடமுண்டு. அடுத்து ஒரு மாற்று மத குருவுக்கு பக்கத்தில் உர்காரவும் வேண்டாம் என்று ஷரீஆவில் எங்கும் சொல்லப் படவும் இல்லை.

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts