மட்டக்களப்பு
உறுகாமத்தில் உள்ள முஸ்லிம்களின் வியாபார நிலையமொன்று இனந்தெரியாதோரால் தீ
வைத்து எரிக்கப்பட்ட நாசகார சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
உறுகாமம் பிரதான வீதியில் அமைந்திருந்த வியாபார நிலையத்தையே இனம்தெரியாத
சிலர் தீயிட்டு கொழுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவத்தில் “திராவிடன் சேனை” என்ற அமைப்புக்கு தொடர்புள்ளதாக
சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை
கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரவு நடைபெற்ற
மேற்படி சம்பவத்தில் கடையும் கடைக்குள் இருந்த பொருட்கள் உட்பட ஒரு
முச்சக்கரவண்டியும், சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் உறுகாமத்தில் அமைக்கப்படும்
வீட்டுத் திட்டம் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட
போது முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமை தாங்கும் ரீ.எம்.வீ.பி
கட்சியின் உயர்மட்ட உறுப்பினரும் செங்கலடி வர்த்தகருமான தியேட்டர் மோகன்
‘உறுகாமத்தில் இந்திய அரசின் வீட்டுத் திட்டமா அல்லது இஸ்லாமிய
குடியேற்றத்திட்டமா?’ என்ற இனத்துவேஷ துண்டுப் பிரசுரத்தை விநியோகித்து
முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பதற்றமும் அச்ச நிலையை ஏற்படுத்தியது
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: