ஈரான்
அதிபருக்கான தேர்தல் பிரச்சாரம் ஒய்ந்தது. நாளை வாக்குப்பதிவு
நடக்கிறது.அதிபர் தேர்தலில் ஆறுபேர் போட்டியிடுகின்றனர். ஈரான் ஆன்மீக உயர்
தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னயி, பொதுமக்களிடம் தங்களது வாக்குரிமையை
நிறைவேற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
சீர்திருத்தவாதியாக கருதப்படும் ஹஸன் ரூஹானி, அணுசக்தி
பேச்சுவார்த்தைகளின் ஈரானின் பிரதிநிதியான ஸஈத் ஜலீலி, முன்னாள்
டெஹ்ரான்மேயர் முஹம்மது பகர் காலிபாஃப், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்
அலி அக்பர் விலாயத்தி ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ள பிரபலங்கள் ஆவர்.
முன்னாள் அதிபர்களான முஹம்மது காத்தமி மற்றும் அக்பர் ஹஷ்மி ரஃப்ஸஞ்சானி
ஆகியோரின் ஆதரவுடன் ஹஸன் ரூஹானி அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
0 கருத்துகள்: