
பன்னிரெண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள்
முதலீட்டுடன் அமைக்கப்படவிருக்கும் இப்பல்கலைக்கழக கல் லூரிக்கான
புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று 11 காலையில் காத்தான்குடி நகரில்
கைச்சாத்திடப்படும் என்று ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் அப்துல் காதர்
மஸூர் மெளலானா நேற்று தெரிவித்தார்.
இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில்
பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும், இளைஞர் விவ கார, திறன்
விருத்தி அமைச்சின் செய லாளரும், கைச்சாத்திடவுள்ளனர். இந்நிகழ்வில்
அமைச்சர் டளஸ் அழகப்பெரும விஷேட அதிதியாகக் கலந்து கொள்கின்றார்.
அத்தோடும், தாமும் கலந்துகொள்வதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும்
குறிப்பிடுகையில், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலின் கீழ் இந்த
பல்கலைக்கழக கல்லூரி ரிதிதென்னவில் ஐம்பது ஏக்கரில் அமைக்கப்படவுள்ளது.
நிர்மாணப்பணிகள் யாவும் அடுத்து வரும் மூன்று வருடங்களில் நிறைவுறும்.
என்றாலும் இக்கல்லூரி எதிர்வரும் ஆகஸ்ட்
மாதம் 25ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில்
காத்தான்குடியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும்.
இக்கல்லூரியில் உயர் கல்விக்காக இன, மத
பேதமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுவர். என்றாலும் அரபு மத்ரஸாக்களில் கற்று
வெளியாகும் மாணவர்களுக்கு இங்கு விஷேடமாகத் தொழில்நுட்ப கல்வி
அளிக்கப்படும். அத்தோடு அரபு மொழி ஒருமொழியாகக் கற்பிக்கப்படும். இங்கு
ஏனைய எல்லா பாடங்களும் கற்பிக்கப்படும். ஆனால் இதனை முஸ்லிம்கள்
முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
இலங்கை முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக்காக
ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களில் இதுவும் ஒன்று. இதனையிட்டு
முஸ்லிம்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்றார்.
சவூதிய அரேபிய முதலீட்டாளரான அஷ்ஷெய்க்
யஹ்யா அப்துல் அஸீஸ் அல் ராஷித், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
தலைமையில் நாடு துரித அபிவிருத்தி கண்டு வருவது எமக்கு மகிழ்ச்சி
அளிக்கின்றது. அந்தவகையில் இக்கல்லூரியில் நாம் நம்பிக்கையுடன்
முதலிடுகின்றோம். இந்நாட்டின் அபிவிருத்திக்கு எம்மாலான பங்களிப்புகளை நாம்
நல்குவோம் என்றார்.
0 கருத்துகள்: