ராஜஸ்தானின்
"டோங்" மாவட்டத்தின் "சாவ்னி" என்ற ஊரில் பள்ளிவாசலுக்குள் புகுந்து,
வெறியாட்டம் போட்ட காவி கும்பல்டன் போலீசும் கை கோர்த்துக் கொண்டு
"மோதினார்" உள்ளிட்ட முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தி, கடும்
பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
முஸ்லிம்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திய பிறகு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களுக்கு விரோதமாக, ஒரு சார்பாக நடந்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர்,
எஸ்.பி., உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்யக் கோரியுள்ளது, ஜம்யியத்துல் உலமா
அமைப்பு.
சாவ்னி முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்தக் கொடூர
தாக்குதல், ராஜஸ்தானில் கடந்த ஆண்டு, பள்ளிவாசலுக்குள் புகுந்து
முஸ்லிம்களை சுட்டுத்தள்ளிய இன்னொரு "கோபால்கர்" சம்பவத்தை நினைகூருவதாக
உள்ளது.
சாவ்னி வன்முறை பற்றிய விவரமாவது :
கடந்த
வியாழக்கிழமை (11/07) இரவு 10 மணியளவில் பள்ளிவாசல் வழியே (தராவீஹ் தொழுகை
நடந்துக் கொண்டிருந்த வேளையில்) மேல தாளங்களுடன் சென்ற ஊர்வலத்தினர், மசூதி
வாசலில் வைத்து நீண்ட நேரம் கொட்டு அடித்தும், ஆட்டம் போட்டும்
முஸ்லிம்களின் தொழுகைக்கு ஊரு விளைவித்ததையடுத்து சலசலப்பு ஏற்பட்டது.
மறுநாள் வெள்ளிக்கிழமையன்று (12/07) முஸ்லிம் பகுதிகளில் உள்ள வீடுகளை
அடித்து நொறுக்கியும், தெருக்களில் கல்லெறிந்தும் வன்முறையில் ஈடுபட்ட
கும்பல், பள்ளிவாசலுக்குள்ளும் புகுந்து, அங்கிருந்தவர்களை அடித்து
உதைத்தனர்.
வன்முறை கும்பலிடமிருந்து முஸ்லிம்களை பாதுகாக்க
வேண்டிய காவல்துறையினரும் காவி கும்பலுடன் கை கோர்த்துக் கொண்டு,
பள்ளிக்குள் புகுந்து கொடுந் தாக்குதல் நடத்தினர்.
இதனால் நாசிர் (30) என்ற இளைஞர் பலியாகிவிட்ட நிலையில், 92 முஸ்லிம்கள் படு காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 30 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து ஜம்யியத்துல் உலமா அமைப்பின், மவுலவி அப்துல் வாஹித் குறிப்பிடுகையில்:
கலவரக்கும்பலுடன் காவலர்களும் சேர்ந்துக் கொண்டு பள்ளிக்குள் புகுந்து,
தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலின்
தடையங்களாக பள்ளி முழுவதும் ரத்தக்கறை படிந்துள்ளது,என்றார்.
முஸ்லிம்கள் தரப்பில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள்
எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது கூட தெரியாத அளவுக்கு முஸ்லிம் விரோத
நடவடிக்கைகளில் போலீஸ் ஈடுபட்டு வருகிறது, என்ற அப்துல் வாஹித்,
ஒரு சார்பாக நடந்துக்கொள்ளும் மாவட்ட ஆட்சியரை உடனடியாக பதவி நீக்கம் செய்துவிட்டு "சிபிஐ" விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
0 கருத்துகள்: