பொதுபலசேன
அமைப்பின் ஒரு கிளையை கல்முணையில் திறக்கும் படி கல்முனை வாழ் பெருமளவிளான
தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இவ் விடயம் சம்பந்தமாக
அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதாகவும் பொதுபல சேன அமைப்பின்
அமைப்பளர் திலங்க விதாணகே தெரிவித்துள்ளார். கல்முனையில் அலுவலகத்தினை
திறப்பதற்கு கல்முனை தமிழ் பிரதேசத்தில் போதிய வசதிகள் செய்து தருவதாகவும்
கல்முனை தமிழ் வாழ் குழுவினர் இரண்டு முறை பொதுபலசேன அமைப்பின்
அலுவலகத்திற்கு சமுகம் தந்து பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் திலங்க
விதானகே தெரவித்துள்ளார். கல்முனை பிரதேசத்தில் உள்ள சில அரசியவாதிகளே
எமது கிளை அமைப்பதற்கு தடையாக உள்ளனர். கல்முனை சகல சமுகங்களும் சமமாக
வாழவேண்டும் நாம் தமிழ் சமுகத்தின் கோரிக்கைக்கு செவிசாய்த்து மிக விரைவில்
கல்முனையில் எமது அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் திலங்க திலங்க
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: