இன்று
உலகில் மனித உயிர்களின் விலை மிக மிக குறைந்த விலையில் விற்பனையில்
காணப்படுகின்றது .அதிலும் உலக முஸ்லிம்களின் உயிர் அதை விட மிக மிக குறைந்த
விலையில் காணப்படுகின்றது . இதை நாம் சிரியா , ஈராக் , ஆப்கனிஸ்தான் ,
பாலஸ்தீன் , செச்னியா , மியன்மார், காஸ்மீர் போன்ற நாடுகளில் காணக்கூடியதாக
உள்ளது .இப்போது இந்த வரிசைகளில் எகிப்தும் இணைந்துள்ளது . இங்கே
குறிப்பிட்ட இந்த நாடுகளிலும் இன்னும் பல நாடுகளிலும் முஸ்லிம்களின் உயிர்
விலை மதிப்பற்றதாக மாறியுள்ளது .
ஒட்டு மொத்தமாக சொல்வதாக இருந்தால் உலக சந்தையில் முஸ்லிம்களின் உயிர் விலை மதிப்பற்றதாக உள்ளது .
அந்த வகையில் இன்று எகிப்தில் மனித உயிர்கள் மிக மிக சர்வ சாதாரணமாக
பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது . இதில் இராணுவம் , பாமரமக்கள் , சிறுவர்கள்
,பெண்கள் என வித்தியாசம் இன்றி உயிர்கள் பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது .
இதற்கு காரணம் யார் என்று பார்க்கும் போது ஒவ்வரு சாராரும் மற்ற சாராரை
குறை கூறிக்கொண்டு இருக்கின்றனர் .
ஒரு சாரார் இதை எகிப்து
இராணுவம் தான் மேற்கொள்கிறது என்றும் , இன்னொரு சாரார் இதை இஹ்வான்கள் தான்
செய்கின்றார்கள் என்றும் , இன்னொரு சாரார் இதற்கு காரணம் எகிப்து சலபிகள்
என்றும், மற்றுமொரு சாரார் இதற்கு காரணம் மத சார்பற்றவர்கள் என்றும் இப்படி
ஒவ்வரு சாராரும் மற்ற சாராரை குறை கூறுகிறார்களே தவிர இதை தடுப்பதற்கு
என்ன வழி என்பதை சிந்திக்க மறந்து தொடர்ந்தேச்சியாக குறை கூறிக்கொண்டே
இருக்கின்றனர் . இதனால் எகிப்து மனித உயிர்கள் மலிவு விலையில் எகிப்து
சந்தையில் காணப்படுகின்றது .
இன்னொரு கோணத்தில் பார்த்தால்
அமெரிக்கா இரு சாராருக்கும் சமாதானம் ஏற்படுத்தபோகிறோம் என்ற கோணத்தில்
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் வேலையை செய்து
வருகின்றது . இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா இரட்டை வேடம் பூண்டுள்ளது
என்றே சொல்ல வேண்டும் .
நோன்பு என்று கூட பார்க்காமல் எகிப்து
மக்களின் உயிர்கள் தொழுகையில் வைத்தும் , பஸ்களில் வைத்தும் , ஆர்ப்பாட்ட
கலங்களில் வைத்தும் பறிக்கபட்டு கொண்டிருக்கிறது . இந்த இரத்ததிற்கு
பொறுப்புதாரி யார் ??????????????? உயிர்கள் மட்டுமல்லாமல் எகிப்தின்
உடமையும் வீணடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது .
இன்று தமிழ் பேசும்
நாம் எகிப்தின் நிலையில் எதிர்ப்பு நிலை கொண்டவராகவும் ,சார்பு நிலை
கொண்டவராகவும் காணப்படுகின்றோம் . ஆனால் நம் இந்த நிலைப்பாடு எகிப்தில்
எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதும் எமக்கு தெரியும் . இதில்
முடிவெடுக்க வேண்டியவர்கள் எகிப்து மக்களே . இதை நாம் அனைவரும் உணர்ந்து
கொள்ள வேண்டும் .
அல்லாஹ் எகிப்தையும் , எகிப்து மக்களையும் பாதுகாக்க வேண்டும் .
0 கருத்துகள்: