மஹியங்கனை
பள்ளிவாசலை மூடுமாறு உத்தரவிட்டவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுத்து,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போன்ற அதிகாரமிக்கவர்கள் பள்ளவாசலை திறக்குமாறு
உத்தரவிட்டால் மாத்திரமே மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை மீண்டும் திறக்க
முடியுமென அப்பள்ளிவாசல் தலைவர் சீனி மொஹம்மது கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆத்திரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை மேற்கொள்வதைவிட நிதானமாக
முடிவுகள் எட்டப்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். தற்போதும் பள்ளிவாசல்
மூடப்பட்டுள்ளது. பள்ளிவாசல் எப்போது திறக்கப்படும் என்பது எமக்கு
தெரியாது.
பள்ளிவாசலை மூடிவிடுமாறும், அங்கு தொழுகை
நடாத்தக்கூடாதெனவும் எமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதன்படியே நாம் பள்ளிவாசலை
மூடியுள்ளோம். பள்ளிவாசலை மீண்டும் திறக்க வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ போன்ற அதிகாரமிக்கவர்கள் அதற்கு உத்தரவிட வேண்டும்.
பள்ளிவாலை மூடச்சொன்னவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுக்கவேண்டும்.
அப்போதுதான் பள்ளிவாசலை மீண்டும் திறக்க கூடியதாக இருக்கும் எனவும்
பள்ளிவாசல் தலைவர் நம்பகத் தகுந்த இணையதம் ஒன்றுக்கு கூறினார்.
0 கருத்துகள்: