திருக்குர்
ஆனின் பலன்களை வாழ்க்கையில் உணர்ந்து கொள்வதற்கு திரும்ப திரும்ப ஓதுவது
மட்டும் போதாது; மாறாக அதன் கருத்துக்களை ஆழமாக உள்வாங்கி அதன்படி
நடக்கவும் வேண்டும், அப்போதுதான் இம்மையிலும் மறுமையிலும் உண்மையான
வெற்றியை பெற முடியும் என தற்போது துபாயில் இடம்பெற்று வரும் சர்வதேச குர்
ஆன் விருதுகள் விழாவில் டொக்டர் அல் துவைஷ் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபிய அல் காசிம் பல்கலைகழகத்தின் சுன்னாவுக்கான பேராசிரியராக
கடமையாற்றும் அவர் பெரும் மார்க்க அறிஞர்கள் பட்டாளத்துடன் வெகு விமரிசையாக
இடம்பெற்று வரும் இவ்விழாவின் நான்காம் நாள் நிகழ்வுகள் நேற்று இடம் பெற்ற
பொது அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
17வது வருடமாக இடம்பெற்று வரும் இந்நிகழ்வு 22 நாட்கள் தொடர்ந்து நடை பெறும் என்பது குறிப்படத்தக்கது.
0 கருத்துகள்: