உலகின் வேகமான மனிதன் யார் என்று கேட்டால் உங்கள் உதடுகள் உஸைன் போல்ட் என உச்சரிக்கும். இலங்கையின் இவ்வாண்டுக்கான அதிவேக மனிதன் யார்
என்று தெரியுமா? அவர்தான் வெலிகம எனும் நகரத்திலே 1985ஆம் ஆண்டு ஜனவரி
31ஆம் திகதி முஹம்மத் ஷரீப் -- பாத்திமா நயிமுன்திஸா
தம்பதியினருக்குப் பிறந்த புதல்வரான சப்ரான். வெலிகம, புதிய
தெருவில் வசித்து வரும் இந்த வேக மனித தனது கல்வியைப் பெற்றுக்கொண்டது
வெலிபிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்திலாகும். தற்போது தேசிய
அளவில் சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழும் சப்ரான், இலங்கையின்
அதிவேக மனிதனாக வளர்ச்சி கண்ட கதை உங்களுக்குத் தெரியுமா? அது
1995ஆம் ஆண்டு. வெலிபிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற
இல்ல விளையாட்டுப் போட்டியே சப்ரானை ஓட்டப் பாதைகளுடன் தொடர்ந்தும்
சங்கமிக்கச் செய்தது என்றால் அது மிகையாகாது. இல்ல விளையாட்டுப்
போட்டியில் அதீத திறமைகளை வெளிப்படுத்தியதன் விளைவு சப்ரானை அதே
ஆண்டு மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகளையும் தாண்டி தேசிய ரீதியில் 75
மீற்றர், 100 மீற்றர் போட்டிகளில் 3ஆம் இடத்தைப் பெற்றுக்கொடுத்தது.
இன்று பிரபல பாடசாலைகளில் காணப்படும் விளையாட்டுப் பயிற்சி வசதிகளில் 10% வசதி கூட இல்லாத அப்போதைய வெலிப்பிட்டிய ஸாஹிரா மகா வித்தியாலய மாணவன் தேசிய ரீதியில் பிரகாசித்ததன் பின்னணியின் ரகசியம் அப்பாடசாலையில் கற்பித்துக் கொண்டிருந்த கலீல், ஹிதாயதுல்லாஹ் மற்றும் ஹரீர் மெளலானா ஆகிய ஆசிரியர்கள் தனக்குத் தந்த பயிற்சியென இன்றும் நன்றியுடன் நினைவு கூறுகிறார். அத்துடன் பாடசாலையின் அதிபர் மற்றும் ஏனைய ஆசிரியர்களின் ஆதரவு தன்னை மேலும் உற்சாகப்படுத்தியதாகவும்
அவர் புளகாங்கிதம் அடைகிறார். பாடசாலை ஆசிரியர்களின் பயிற்சியின்
கீழ் தொடர்ந்தும் 1999ஆம் ஆண்டுவரை அகில இலங்கை
பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் இறுதிச்
சுற்றுவரை தெரிவான சப்ரானுக்கு பதக்கம் வெல்ல முடியாமல் போனது.
இதனால் மேலதிக பயிற்சிகள் தேவை என்பதை பாடசாலை ஆசிரியர்கள்
உணர்ந்ததன் விளைவு அக்குரஸ்ஸ கல்வி வலயத்தின் விளையாட்டுக்கள்
தொடர்பில் பொறுப்பதிகாரியான பண்டாரவின் உதவியுடன் மாத்தறை
மாவட்ட விஷேட விளையாட்டுப் பயிற்சியாளரான சுனில் ஜயசிங்கவின்
விளையாட்டுப் பாசறையில் மாணவரானார் சப்ரான். இதனைத் தொடர்ந்து சாதனைகள்
சப்ரானை தேடி வந்தன. 2000ஆம் ஆண்டு அகில இலங்கை நிறச் சாதனையை நிலை
நாட்டிய சப்ரான் 2001ஆம் ஆண்டு 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சிறப்புப்
பதிவுடன் கூடிய வெற்றியையும் 100 மீற்றரில் முதலாம் இடத்தையும்
தன்னகப்படுத்தி தனது மேலதிகப் பயிற்சிகளின் பெறுபேரை
வெளிப்படுத்தினார்.
இதனால் 2002ஆம் ஆண்டு தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சப்ரானுக்கு கிடைத்தது. இதனை விட 2003ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் முதலாம் இடம் என்பது 100M இலும், 200Mஇலும் சப்ரானுக்காகவே எழுதி வைக்கப்பட்டதைப் போல தொடர்ந்தும் சொந்தமானது.இக்காலப் பகுதிக்குள் ஓடுவதற்குத் தேவையான பாதணிகள் மற்றும் உற்சாகங்களை பல்வேறு தரப்பினர் வழங்கியதாக நினைவு கூறும் வேகப்புயல் சப்ரான் தனது உறவினர்களையும் பாடசாலையின் பழைய மாணவன் வாசிக், தான் கொழும்பு வந்த போது பயிற்சி காலத்தில் சிலகாலம் அனுசரணை வழங்கிய ரிஸ்மி ஹாஜியார் மற்றும் தங்குவதற்கு இடம் வழங்கிய ஹூசைன் ஹாஜியார் ஆகியோரையும் தான் மறக்கவில்லையென வாய் மலர்கிறார். 2006ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100M அஞ்சலோட்டப் போட்டியில் களம் காணும் வாய்ப்பு சப்ரானுக்குக் கிடைத்தது. அதன் விளைவு அவரை இராணுவ விளையாட்டுப் பிரிவு ஒப்பந்தம் செய்யுமளவில் கொண்டு போய்விட்டது. குறித்த போட்டிகளின் முடிவில் பல்வேறு கழகங்களிலிருந்தும் சப்ரானுக்கு அழைப்பு வந்த போதும் அவர் இராணுவ விளையாட்டுப் பிரிவையே சிறந்தது என தேர்ந்தெடுத்தார். இப்படியான ஒரு வேகப்புயல் எமது சமூகத்தில் உள்ளதை நாம் கண்டு கொண்டது அண்மையில் நிறைவடைந்த 38ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளிலாகும். குறித்த விளையாட்டு விழாவில் 100M ஓட்டப் போட்டியில் 10.64 செக்கன்கள் என்ற இலங்கைக்கான சாதனையை தன்னகப்படுத்திய வேகமனிதன் சப்ரான், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் சார்க் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தப்
போகிறார்.இந்நிலையில் இன்று நாம் வாழும் நாட்டில் பெரும்பான்மை
சமூகத்தவர்களின் மனதில் பதிந்துள்ள பிழையான பதிவுகளை அழித்து
சரியான நல்ல பதிவுகளை ஏற்படுத்த சப்ரான் ஒரு துரும்பு என்றால் அது
மிகையாகாது.
ஏனெனில் முஸ்லிம்களால் இந்நாட்டுக்கு பெருமை சேர்க்கப்படுகின்றது என்பதனை நாம் எடுத்துக்காட்ட வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளோம்.எனினும் எமது சமூகம் விளையாட்டு தொடர்பில் கவனம் மற்றும் அக்கறையற்றும் இருப்பது கவலைக்குரியது. சாதனைகள் பல படைக்க திறமையை தன்னகத்தே கொண்டுள்ள சப்ரானுக்கு தற்போது உள்ள பிரச்சினை ஒரு அனுசரணையே. கல்விக்கும் இதர பல விடயங்களுக்கும் அனுசரணை வழங்கும் பல வள்ளல்கள் உள்ள எமது சமூகத்தில் ஒரு சாதனையாளருக்கு அனுசரணை வழங்க யாரும் இல்லையா என எண்ணத் தோன்றுகிறது. சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கப் போகும் சப்ரானின் சாதனைப் பயணத்தில் கைகோர்த்து அவரின் தற்போதைய தேவைகளான சில முக்கிய விட்டமின் வகைகள் மற்றும் R-4 உயர்ரக வகையிலான பாதணிகள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க சமூகத் தலைமைகள் முன்வர வேண்டும். குடும்பத்தையும் பராமரித்துக் கொண்டு தற்போது கொழும்பிலுள்ள இலங்கை மெய்வல்லுனர் தங்குமிடத்தில் தங்கியிருந்து பயிற்சிகளைத் தொடர்ந்து வருகிறார். சிறப்பு விளையாட்டுப் பயிற்சியாளரான சுனில் குணவர்த்தனவிடம் பயிற்சிகளை தொடரும் சப்ரான் 2012ஆம் ஆண்டின் இலங்கையின் வேகமான விளையாட்டு வீரன் என்பதை மறந்து விடாதீர்கள்.
இன்று பிரபல பாடசாலைகளில் காணப்படும் விளையாட்டுப் பயிற்சி வசதிகளில் 10% வசதி கூட இல்லாத அப்போதைய வெலிப்பிட்டிய ஸாஹிரா மகா வித்தியாலய மாணவன் தேசிய ரீதியில் பிரகாசித்ததன் பின்னணியின் ரகசியம் அப்பாடசாலையில் கற்பித்துக் கொண்டிருந்த கலீல், ஹிதாயதுல்லாஹ் மற்றும் ஹரீர் மெளலானா ஆகிய ஆசிரியர்கள் தனக்குத் தந்த பயிற்சியென இன்றும் நன்றியுடன் நினைவு கூறுகிறார். அத்துடன் பாடசாலையின் அதிபர் மற்றும் ஏனைய ஆசிரியர்களின் ஆதரவு தன்னை மேலும் உற்சாகப்படுத்தியதாகவும
இதனால் 2002ஆம் ஆண்டு தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சப்ரானுக்கு கிடைத்தது. இதனை விட 2003ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் முதலாம் இடம் என்பது 100M இலும், 200Mஇலும் சப்ரானுக்காகவே எழுதி வைக்கப்பட்டதைப் போல தொடர்ந்தும் சொந்தமானது.இக்காலப் பகுதிக்குள் ஓடுவதற்குத் தேவையான பாதணிகள் மற்றும் உற்சாகங்களை பல்வேறு தரப்பினர் வழங்கியதாக நினைவு கூறும் வேகப்புயல் சப்ரான் தனது உறவினர்களையும் பாடசாலையின் பழைய மாணவன் வாசிக், தான் கொழும்பு வந்த போது பயிற்சி காலத்தில் சிலகாலம் அனுசரணை வழங்கிய ரிஸ்மி ஹாஜியார் மற்றும் தங்குவதற்கு இடம் வழங்கிய ஹூசைன் ஹாஜியார் ஆகியோரையும் தான் மறக்கவில்லையென வாய் மலர்கிறார். 2006ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100M அஞ்சலோட்டப் போட்டியில் களம் காணும் வாய்ப்பு சப்ரானுக்குக் கிடைத்தது. அதன் விளைவு அவரை இராணுவ விளையாட்டுப் பிரிவு ஒப்பந்தம் செய்யுமளவில் கொண்டு போய்விட்டது. குறித்த போட்டிகளின் முடிவில் பல்வேறு கழகங்களிலிருந்தும் சப்ரானுக்கு அழைப்பு வந்த போதும் அவர் இராணுவ விளையாட்டுப் பிரிவையே சிறந்தது என தேர்ந்தெடுத்தார். இப்படியான ஒரு வேகப்புயல் எமது சமூகத்தில் உள்ளதை நாம் கண்டு கொண்டது அண்மையில் நிறைவடைந்த 38ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளிலாகும். குறித்த விளையாட்டு விழாவில் 100M ஓட்டப் போட்டியில் 10.64 செக்கன்கள் என்ற இலங்கைக்கான சாதனையை தன்னகப்படுத்திய வேகமனிதன் சப்ரான், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் சார்க் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தப
ஏனெனில் முஸ்லிம்களால் இந்நாட்டுக்கு பெருமை சேர்க்கப்படுகின்றது என்பதனை நாம் எடுத்துக்காட்ட வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளோம்.எனினும் எமது சமூகம் விளையாட்டு தொடர்பில் கவனம் மற்றும் அக்கறையற்றும் இருப்பது கவலைக்குரியது. சாதனைகள் பல படைக்க திறமையை தன்னகத்தே கொண்டுள்ள சப்ரானுக்கு தற்போது உள்ள பிரச்சினை ஒரு அனுசரணையே. கல்விக்கும் இதர பல விடயங்களுக்கும் அனுசரணை வழங்கும் பல வள்ளல்கள் உள்ள எமது சமூகத்தில் ஒரு சாதனையாளருக்கு அனுசரணை வழங்க யாரும் இல்லையா என எண்ணத் தோன்றுகிறது. சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கப் போகும் சப்ரானின் சாதனைப் பயணத்தில் கைகோர்த்து அவரின் தற்போதைய தேவைகளான சில முக்கிய விட்டமின் வகைகள் மற்றும் R-4 உயர்ரக வகையிலான பாதணிகள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க சமூகத் தலைமைகள் முன்வர வேண்டும். குடும்பத்தையும் பராமரித்துக் கொண்டு தற்போது கொழும்பிலுள்ள இலங்கை மெய்வல்லுனர் தங்குமிடத்தில் தங்கியிருந்து பயிற்சிகளைத் தொடர்ந்து வருகிறார். சிறப்பு விளையாட்டுப் பயிற்சியாளரான சுனில் குணவர்த்தனவிடம் பயிற்சிகளை தொடரும் சப்ரான் 2012ஆம் ஆண்டின் இலங்கையின் வேகமான விளையாட்டு வீரன் என்பதை மறந்து விடாதீர்கள்.
0 கருத்துகள்: