பொது பல சேனா என்ற அமைப்பை ஆதரித்து தான் ஒருபோதும் கருத்து கூறவில்லை எனவும் இது தொடர்பில் வெளியான செய்திகளில் உண்மை
இல்லை எனவும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா விடிவெள்ளியிடம்
தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, பொது பல சேனா
பெளத்தர்களுக்காக ஹலாலை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் பாதுகாப்பு
செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க தன்னுடைய நிலைப்பாட்டை அவ்வமைப்பு
மாற்றிக்கொள்வதானால் பாதுகாப்பு செயலாளருக்காகவே அவர்கள் செயற்பட்டுள்ளனர்
என்பது தெளிவாகிறது என்றே கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நான்
கூறியிருந்தேன். பொது பல சேனா அமைப்பின் நடவடிக்கைகளை நாம் ஒரு போதும்
அங்கீகரிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வியாழன், 11 ஏப்ரல், 2013
0 கருத்துகள்: