சுனிதா
வில்லியம்ஸ்அஹமதாபாத் : புகழ் பெற்ற விண்வெளி வீராங்கனையான சுனிதா
வில்லியம்ஸ் தன்னுடைய சமீபத்திய குஜராத் சுற்றுப்பயணத்தின் போது, குஜராத்
முதல் அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்திக்காமல் புறக்கணித்தற்கான அதிர்ச்சி
காரணம் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் 3 நாள் பயணமாக அமெரிக்காவின் விண்வெளி வீராங்கனை சுனிதா
வில்லியம்ஸ் குஜராத் வந்தார். சுனிதாவுக்கும் மோடிக்கும் இடையேயான
சந்திப்புக்கு குஜராத அரசு எவ்வளவோ முயற்சி செய்த போதும் மோடியைச் சந்திக்க
சுனிதா ஒப்பு கொள்ளவில்லை.
விமான நிலையத்திலிருந்து அழைத்து
செல்ல வந்த குஜராத் அரசு வாகனத்தில் சுனிதா வில்லியம்ஸ் ஏற மறுத்தார்.
மேலும் சுனிதா மோடியைச் சந்திக்க ஒப்பு கொள்ளாததால் அரசு விருந்தினராக
வருகை தந்திருந்த போதும் சுனிதாவுக்குத் தேவையான வசதிகளை குஜராத் அரசு
நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என தெரிகிறது.
விண்வெளி பயணம்
முடித்தவுடன் குஜராத்துக்கு 2007ம் ஆண்டு வருகை தந்த சுனிதாவுக்கு குஜராத்
அரசு சார்பில் விருந்து கொடுக்கப்பட்டது. பிஜேபியில் கேசுபாய் படேலுக்கு
நெருக்கமான, மோடியின் எதிர்ப்பாளராக கருதப்பட்ட ஹரேன் பாண்டியா 2003 ம்
ஆண்டு கொல்லப்பட்டார்.
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில்
கொல்லப்பட்டவர்களின் உடல்களை அஹமதாபாத் கொண்டு வர கூடாது என்று மோடியிடம்
வாதிட்டவர் என்பதாலும் குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கை நன்கறிந்தவர்
என்பதாலேயே துளசிராம் என்பவர் மூலம் பாண்டியா கொல்லப்பட்டார் என்று குஜராத்
கலவரத்துக்கு முன்னர் மோடியின் வீட்டில் பிப்ரவரி 27,2002 அன்று நடந்த
கூட்டத்தில் பாண்டியாவுடன் பங்கேற்ற முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்
கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே மோடி தான் ஹரேன்
பாண்டியாவைக் கொலை செய்தார் என்று பாண்டியாவின் குடும்பத்தினர்
நம்புவதாலேயே ஹரேன் பாண்டியாவின் ஒன்று விட்ட சகோதரி சுனிதா வில்லியம்ஸ்
நரேந்திர மோடியைச் சந்திக்காமல் ஹரேன் பாண்டியாவின் குடும்பத்துடன் நேரத்தை
செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 கருத்துகள்: