முஸ்லிம் சமூகத்தில் ஒருவகையான அடிப்படைவாதம் தலைதூக்குவது குறித்து நாம் அறிவோம். அது தொடர்பில் பாதுகாப்பு
மற்றும் உளவுப்பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என வீடமைப்பு
நிர்மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச
தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள
செவ்வியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிங்கள மக்கள் சனத்தொகையில் எதிர்காலத்தில் வீழ்ச்சி அடையலாம் என ஒரு பயம் உள்ளது. பெஷன் பக்கை தாக்குவதனூடாக சிங்கள பெளத்த சனத்தொகையை பெருக்க முடியுமாயின் நானும் கல்லெறிய தயார். எனினும் அவ்வாறு செய்யமுடியாது.
இராணுவ மற்றும் பொலிஸ் சேவையில் உள்ளவர்கள் 3 பிள்ளைகளை பெரும் பட்சத்தில் அவர்களின் 3 ஆவது பிள்ளைக்கான விஷேட உதவித்தொகை வழங்கப்படுமென ஜனாதிபதி அறிவித்துள்ளார். அவ்வாறெனில் இராணுவத்திலும் பொலிஸிலும் சிங்கள பெளத்தர்களே அதிகம் உள்ளனர். இவ்வாறான ஆக்கபூர்வமான திட்டங்களே இன்று தேவை.
சிங்கள பெளத்தர்கள் இன்று பல நிகாயாக்கள் ஊடாக பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளனர்.இவர்கள் அனைவரையும் ஒன்றினைக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. மகாநாயக்க தேரர்கள் இது குறித்து செயற்படவேண்டும்.
இன்று முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் ஒரு வகையான அடிப்படைவாதம் உள்ளதை நாம் அறிவோம்.எனினும் அதனை பாதுகாப்பு தரப்பு கவனித்துக்கொள்ளும். 30 வருட பயங்கரவாத்துக்கு எதிரான போரை நிறைவு செய்து நாட்டை மீட்ட இராணுவமும் புலனாய்வுப்பிரிவும் எம்மிடம் உள்ளது. எனவே எவ்வகையான அடிப்படைவாதமாக இருப்பினும் அதனை முறையடிக்ககூடிய சக்தி எம்மிடம் உள்ளது என தெரிவித்தார்.

0 கருத்துகள்: