இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருக்கின்ற காரணத்தினால் ஜனாதிபதியை சந்திக்கமுடிகிறது, அமைச்சரவையிலே முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை பேசமுடிகிறது, அரசாங்கத்தில் இருக்கின்ற கட்சித்தலைவர்களை சந்தித்து பேசமுடிகின்றது. அதே போன்று பொதுபலசேனா போன்ற அமைப்புகள் மேற்கொள்கின்ற சமூக விரோத செயல்களுக்கெதிராக சட்டத்தை உருவாக்கக்கூடிய அழுத்தத்தைத் கொடுக்கமுடிகின்றது. எல்லாவற்றையும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பின்னர் செய்ய முடியுமா? என்பதையும் இப்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பவர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை அக்கரைப்பற்றில் உள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே மேற்படி கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டில் தற்போது இடம்பெற்றுவருகின்ற அசாதரண சூழ் நிலையை கவனத்திற்கொண்டு முஸ்லிம்கள் விழிப்பாக இருக்கவேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே நாம் கருத வேண்டும் அது முஸ்லிம் சமூகத்திற்குள்ளிருப்பவர்களிடமும், வெளியில் இருப்பவர்களிடமும் மிகக்கவனமாக இருக்கவேண்டும் என்று மக்களை விழிப்பூட்ட வேண்டிய தேவை நமக்கிருக்கிறது முஸ்லிம் காங்கிரசிற்கு எதிரான சக்திகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறுகிறார்கள். அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற வேண்டுமென்று கூறுகின்றவர்கள் அவர்களுடைய இழிவான அரசியல் என்பதை எண்ணத்தில் வைத்துக்கொண்டே இவ்வாறு கூறுகிறார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்குள் இருந்து வெளியேறவேண்டும் என்கின்ற அந்த விடயம் நிகழுமாகவிருந்தால் அதன் ஊடாக முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கக்கூடிய உடனடியான விளைவு அல்லது வெளிப்பாடு என்ன என்பதனை நாங்கள் கேட்க விரும்புகின்றோம். பெரும்பான்மை சமூகத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் ஆட்டம் காணுமா என்ற கேள்வியை வெளியேற வேண்டும் என்று கூறியவர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளவேண்டும்.

என்னைப்பொறுத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்குள் இல்லாமல் இருந்திருந்தால் பொதுபல சேனா கொண்டுபோன பிரச்சாரத்திற்கு தற்போது 1915ஆம் ஆண்டில் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் போன்று, சிங்கள முஸ்லிம் ஒரு பெரிய இன்கலவரம் நாடுபூராகவும் ஏற்பட்டிருக்கவேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்குள் இருக்கின்றமையால் பொதுபல சேனாவினால் செய்யப்பட்டுவரும் பிரச்சாரத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் அடக்கி வாசிக்கின்ற தேவை எல்லேர்ருக்கும் ஏற்பட்டிருக்கின்ற காரணத்தினால்தான் அவ்வாறான ஓர் இனக்கலவரம் ஏற்படவில்லை என்பதனை நான் தெரிவித்துக்கொள்கிறேன். அதுமாத்திரமல்ல இப்போது எதிரணிகள் பலம் குன்றியிருக்கின்றது அதே மாதிரி எதிரணிகளுடைய குரல் செவிடன் காதில் ஊதிய சங்கைப்போன்று இந்த அரச இயந்திரத்தில் பிரயோசனமற்றிருக்கிறது. அந்த அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பிறகு பேசப்போகின்ற எந்தப் பேச்சையும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்போவதில்லை.

அது மாத்திரமல்ல ஏன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவேண்டும். பொதுமக்கள் யோசிப்பதனைப்போன்று நடக்கின்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறிழைத்திருக்கின்றது என்று அரசாங்கத்தினுடைய தவறுகளை பகிரங்கமாக நாம் எடுத்துரைப்போம்.

அதே போன்று அரசாங்கத்தில் இருக்கின்ற தவறுகளை வெளிக்கொணர்கின்றபோது பொதுபலசேனாவையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் கட்டுபடுத்தவேண்டிய தேவை அல்லது ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்படும், அப்படி அல்லா விட்டால் அரசாங்கம் பொதுபலசேனாவுக்கு ஏதாவதொரு வகையில் முட்டுக்கொடுக்கவேண்டிய தேவை இருந்தால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியே தூக்கி எறிகின்ற நிலவரம் வந்து சேரும் அவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூக்கி எறியப்படுகின்றபோது இந்த அரசாங்கம் சிறுபான்மைக்கு எதிராக இருக்கின்றது என்பதனை வெளியே கொண்டுவருவதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அல்லது வெளிப்பாடாக அது அமையும் அந்த அடிப்படையில் அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய சமூகத்திற்காக போராடுவதற்கு முயற்சிக்கவேண்டுமே தவிர, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியிறங்கி முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை இன்னும் பலப்படுத்துவதற்கு இன்னும் அனுமதிக்கமுடியாது என்று நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். என்று மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts