பொலிஸ் நிலைய பாவனைகளுக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருளின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை காலமும் ஜீப் வண்டி ஒன்றிற்காக மாதம் ஒன்றிற்கு 225 லீற்றர் டீசல் ஒதுக்கப்படுவது வழமை எனவும் அதனைவிட 50 லீற்றர் டீசல் மேலதிகமாக பெறப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் தற்போது இதற்குப் பதிலாக 180 லீற்றர் டிசலே வழங்கப்படுகிறது.
இதேவேளை போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளது மோட்டார் வண்டிகளுக்காக மாதம் ஒன்றிற்கு 40 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் மாதம் முதல் 20 லீற்றர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது கடமைகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமையின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எப்படியிருப்பினும் இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: