எகிப்தில்,
முதன்முறையாக ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி
முர்ஸியை சதிப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கச் செய்ததுபோன்று
துருக்கியிலும் ஒரு சதிப் புரட்சியை அரங்கேற்ற, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
முயற்சித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
பலஸ்தீன விடுதலை
அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர் முஹம்மத் தஹ்லான் இந்தப் பணியை
நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் சமீபத்தில் துருக்கி
சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
துருக்கியின் இஸ்லாமியவாத ஆட்சியையும் ஹமாஸின் ஆட்சியையும் கவிழ்ப்பதன்
மூலம் பிராந்தியத்தில் இஸ்லாமியவாதிகளின் ஆட்சியை கவிழ்ப்பதே இந்தத்
திட்டத்தின் நோக்கம் என்றும் தெரியவந்துள்ளது . துருக்கி சென்ற
தஹ்லான், அர்தூகானின் அரசுக்கு எதிரான துருக்கி மற்றும் குர்திஷ் இளம்
செயற்பாட்டாளர்களை சந்தித்துள்ளார். எகிப்திய மாதிரியிலான 'தமர்ருத்'
–கிளர்ச்சி- இயக்கங்களை ஸ்தாபிப்பத்து செயற்படும் நோக்கத்திலேயே இந்த
சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
துருக்கி, எகிப்தில் நிகழ்ந்த சதிப்
புரட்சியை கடுமையாக எதிர்த்து வருகின்றமை சவூதி அரேபியாவையும் ஐக்கிய அரபு
எமிரேட்ஸையும் கோபமூட்டியுள்ளது.
பலஸ்தீன அதிகார சபையின்
முன்னாள் முக்கியஸ்தராகவும், -மதச்சார்பறற்- பலஸ்தீன விடுதலை அமைப்பின்
உறுப்பினராகவும் இருந்த முஹம்மத் பலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி முஹம்மத்
அப்பாஸுடனான முரண்பாடுகளைத் தொடர்ந்து பலஸ்தீன விடுதலை அமைப்பிலிருந்து
நீக்கப்பட்டார். தற்போது இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழ்ந்து வருகிறார்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: