வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிப்பெற்றமைக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உட்பட தமிழக தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கலைஞர் வாழ்த்து

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது வாழ்த்து அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது;.மேலும் உலக தமிழரின் விருப்பத்துக்கு ஏற்ப 13 ஆவது சட்ட திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

மா.கம்யுனிஸ்ட் வாழ்த்து

இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிப்பெற்றுள்ளமை தொடர்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில், தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.

மொத்த வாக்குகளில் 84 சதவீத வாக்குகளைப் பெற்று 38 இடங்களில் 30 இடங்களை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

தேர்தலையொட்டி இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்து இருந்ததாக புகார்கள் எழுந்தபோதும், வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து, ஜனநாயக ரீதியில் தங்களது தீர்ப்பை அளித்துள்ளனர்.

உரிய அதிகாரங்களுடன் கூடிய மாகாண சுயாட்சி தேவை என்ற தங்களது எண்ணத்தை இந்த தேர்தல் மூலமாக தமிழ் மக்கள் உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர்.

மக்களின் இந்த தீர்ப்புக்கு இலங்கை ஆட்சியாளர்கள் மதிப்பளிக்க வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை நீர்த்துப்போகச்செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சித்தது. இது தவறான பாதை என்பதை மக்கள் தற்போது தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனி, இலங்கை அரசாங்கம், மக்களின் மகத்தான நம்பிக்கையை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்போடு அதிகாரப் பரவலுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்திடவேண்டும், 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து மற்றும் அதிகாரப்பரவல் அளித்திட இலங்கை அரசை இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டுமென கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

திருமாவளவன் வாழ்த்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் நடைபெற்ற வடக்கு மாகாணத்துக்கான தேர்தலில் எண்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 36 இடங்களில் 30 இடங்களை அது வென்றிருக்கிறது. வடக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் விக்னேஸ்வரனுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலம் அவர்கள் வெளிப்படுத்திவிட்டனர். அந்த ஒற்றுமையை முன்னோக்கி எடுத்துச் செல்வது த.தே.கூ வின் முன்னால் உள்ள சவால் ஆகும். இவ்வாறு கூறியுள்ளார்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts