திருவொற்றியூர் சின்னமேட்டு பாளையத்தில் வசிப்பவர் முகமது ரபீக் (36). மந்திரவாதி. கேரளாவை சேர்ந்தவர். பில்லி, சூனியம், பேய் விரட்டுதல், தாயத்து மந்திரித்து கொடுத்தல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்.
தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இவரை தேடி வருவார்கள். வெளிமாநிலங்களுக்கும் சென்று அங்கேயே நாள் கணக்கில் தங்கிவிட்டு வீட்டுக்கு திரும்புவாராம்.
முகமது ரபீக்கின் முதல் மனைவி ரமிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. தினமும் இரவில் முகமது ரபிக் குடித்து விட்டு ரமிதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். குழந்தைகளுடன் ரமிதா தனியே வசிக்கிறார்.
இதையடுத்து முகமது ரபீக் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நூர்ஜகான்(31) என்பவரை 2வது திருமணம் செய்தார்.
மந்திரம் செய்யும் தொழில் நூர்ஜகானுக்கு பிடிக்கவில்லை. மந்திரம் செய்து முடிந்ததும் முகமது ரபீக் இரவில் மது அருந்தி விட்டு மனைவியை ஆசைக்கு அழைப்பாராம்.
அதற்கு அவர், மது அருந்தி விட்டு என்னிடம் வராதே என கண்டிப்பாக கூறி வந்துள்ளார். முகமது ரபீக் அதை கேட்காமல் அவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது ரபீக் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த நூர்ஜகானை வலுக்கட்டாயமாக உறவுக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால், ஆத்திரமடைந்த முகமது ரபீக் சமையல் அறைக்கு சென்று, அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து நூர்ஜகானின் மார்பில் சரமாரியாக குத்தியதல் அவர் அலறி துடித்து மயங்கியுள்ளார்.
போதை தெளிந்தபின்தான் மனைவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது முகமது ரபீக்குக்கு தெரிந்தது.
உடனடியாக நூர்ஜகானை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே நூர்ஜகான் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்துக்கு சென்று ரபீக்கை கைது செய்துள்ளார்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்: