வடக்கு,
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் இலங்கையின் ஜனநாயகத்திற்கு
வலுசேர்த்த சிறந்த ஒரு சந்தர்ப்பம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் ஐக்கிய
மக்கள் சுகந்திரக் கூட்டமைப்பு அபார வெற்றிபெற்றமை மற்றும் வட மாகாண சபையை
நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டமை ஆகிய காரணிகள் தாய்நாடு அடைந்துள்ள
பெரு வெற்றியின் மற்றுமொரு படிக்கல் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தெரிவித்துள்ள செய்தியில் ஜனாதிபதி இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் வடக்கை இயல்பு நிலைக்கு மற்றுவதற்காக
அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் ஜனாதிபதி நன்றிகளை
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: