கஃபதுல்லாஹ்வில் "தவாஃப்" செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் "மதாஃப்" பகுதியை விரிவாக்கம் செய்யும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
நவீன எந்திரங்களின் துணையுடன் 2000 நபர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது, தவாஃப் செய்யும் இடங்களை சுற்றியுள்ள கட்டிடங்களை இடிக்கும் வேலைகளும் இடிபாடுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணிகளும் கவனமுடன் கையாளப்பட்டு வருகிறது.
உமராவுக்கு வருபவர்களின் வருகை துவங்கிவிட்டாலும், அவர்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாண்டு ரமலான் மாதத்தில் உமராவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளதால், ரமலானுக்கு முன்னதாகவே "மதாஃப்" விரிவாக்கப்பணிகள் முடிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது
0 கருத்துகள்: