
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து இவர் பதவி விலகினார். இப்போராட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் உட்பட சுமார் 900 பேர் பலியாகினர்.
இதன் காரணமாக முபாரக் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். எனினும் பொதுமக்கள் போராட்டத்தின் போது, அரசு படைகள் தாக்குதல் நடத்தியது தனக்கு தெரியாது என்றும், தன்னுடைய உதவியாளர்கள் இதனை தெரிவிக்காமல் மறைத்து விட்டார் என்றும் நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து மனித உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர் அகமது ரக்ஹெப் கூறுகையில், போராட்டம் தீவிரமாக நடைபெற்ற 18 நாட்களாக அங்கு இடம்பெறும் ஆர்ப்பாட்டப் பேரணியை ஹோஸ்னி முபாரக் தனது மாளிகையிலிருந்து சாட்டெலைட் தொலைக்காட்சி மூலம் பார்த்து வந்தார் என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்: