
சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக கடந்த 22 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இவர்களை சிரியா இராணுவத்தினர் ஒடுக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இராணுவத்திடமிருந்து பல நகரங்களை புரட்சிபடையினர் கைப்பற்றி உள்ளனர்.
குறிப்பாக இராணுவ தளங்களை புரட்சி படையினர் தகர்த்து வருகின்றனர். இந்த சண்டையில் 60 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் டமாஸ்கஸ் அருகே உள்ள இத்லிப் நகரின் விமான நிலையம் மற்றும் ஐந்து விமானப்படை நிலையங்களை கைப்பற்றி புரட்சிபடையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு இராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருவதால், சண்டை நீடிக்கிறது.
இதனால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: