![]()
தலிபானியர்களுக்கெதிராக பேசியதன் விளைவாக கடந்த 2011ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கையில் மலாலா மீது தலிபானியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் இடது கண் மற்றும் தாடையில் குண்டடிப்பட்டு படுகாயமடைந்தார். பின் லண்டனில் உள்ள எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது குணமடைந்துள்ளார்.
எனவே விரைவில் மலாலா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மலாலாவின் தந்தை ஜியாவுதீன் யூசுப்சைக்கு பாகிஸ்தான் அரசு லண்டனிலேயே வேலை அளித்துள்ளது.
அங்குள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கல்வி பணியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
![]() ![]() ![]() ![]() ![]() |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(Atom)
0 கருத்துகள்: