ஓடும் பேருந்தில் மாணவியொருவர் வன்புணரப்பட்டதன் அதிர்ச்சி தேசம் எங்கும் வியாபித்திருக்கும் நிலையில்,
மற்றொரு பலாத்கார முயற்சிக்கு எதிராகப் போராடி முப்பது வயது
பெண்மணியொருவர் ஓடும் தொடர்வண்டியிலிருந்து குதித்து படுகாயம்
அடைந்துள்ளார். பீஹாரின் ஆர்ரா சந்திப்பு அருகே நடைபெற்ற இச்சம்பவத்தில்
அப்பெண்ணுக்கு தலையிலும் கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
திப்ரூகர் - டெல்லி பிரம்மபுத்திரா விரைவு வண்டியில் சம்பவித்த இந்த
அவலத்தில் காயமடைந்துள்ள பெண் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர்
என்றும், காயமுற்ற நிலையில் போஜ்பூர் அருகிலுள்ள சாதர் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
பலாத்காரம் செய்ய முயன்றவரின் பெயர் ரமேஷ்குமார் என்றும் ஹிமாச்சல
பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் என்றும் தெரிகிறது. மேலும், அஸ்ஸாம்
துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த உபாத்யாய் என்னும் வீரர் அந்த
காமுகனைப் பிடித்து ரெயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
தொடர்பாக, இருவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
0 கருத்துகள்: