
பாகிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் உள்ள வசிரிஸ்தானில் இன்று அதிகாலை அமெரிக்கா விமான தாக்குதல்கள் நடத்தியது. தெற்கு வசிரிஸ்தானில் அங்கூர் அட்டாவில் வந்த வாகனத்தில் தலிபான் தலைவர் முல்லா நசீர், துணைத்தலைவர் ரத்தா கான் ஆகியோர் வந்த வாகனத்தை குறிவைத்து அமெரிக்காவின் உளவு விமானம் குண்டு வீசியது. இதில் நசீர், ரத்தா கான் மற்றும் 4 போராளிகள் கொல்லப்பட்டனர்.
இதனை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இத்தாக்குதல் நடந்து சில மணி நேரங்களில் வடக்கு வசிரிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 4 போராளிகள் இறந்தனர். புத்தாண்டு பிறந்ததும் நடந்த முதல் விமான தாக்குதல் இதுவாகும்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெற்கு வசிரிஸ்தானில் செயல்படும் போராளிக் குழுக்களின் கமாணட்ராக செயல்பட்டவர் நசீர். கடந்த 2007-ம் ஆண்டு அவர் பாகிஸ்தான் அரசுடன் அமைதி ஒப்பந்தத்திற்கு முன்வந்தார். அப்போது தங்கள் இயக்கம் பாகிஸ்தான் மண்ணில் தீவிர செயல்களில் ஈடுபடாது என்று உறுதி அளித்திருந்தார்.
ஆனால், அவர் தங்கள் போராளிகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி, அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க குற்றம் சாட்டி விமான தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: