![]()
பிரிட்டனின் யார்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் மார்க் கஹில்(வயது 51). பக்கவாதத்தின் காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன், இவரது வலது கை செயலிழந்தது.
இதனையடுத்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் போனதால் மாற்று கை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து லண்டனில் உள்ள மருத்துவமனையில் எட்டு மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் மாற்று கை பொருத்தப்பட்டது.
எட்டு ரத்த குழாய்கள், மூன்று நரம்புகள், தசை நார்கள், எலும்புகள் ஆகியவை சரியாக இணைக்கப்பட்டன.
கடந்த வாரம் நடந்த இந்த சிகிச்சையின் மூலம், தற்போது மார்க் கஹிலின் கையில் உணர்வு ஏற்பட்டுள்ளது.
ஓரளவுக்கு கை விரல்களை அசைக்கிறார், சகஜநிலைக்கு வர ஆறு மாதமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
![]() ![]() ![]() |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(Atom)
0 கருத்துகள்: