எகிப்தில்
பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்ஸிக்கு ஆதரவாக பேரணி நடத்தியவர்கள் மீது
நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 42 பேர் பலியாகியுள்ளதுடன்
300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நாடு பூராகவும்
அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான அழைப்பினை முர்ஸியின் முஸ்லீம்
சகோதரத்துவக் கட்சி விடுத்தமைக்கு இணங்க நேற்றைய தினம் கெய்ரோவில் மக்கள்
ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு தரப்பினருக்கும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள்
ஜனாதிபதி முஹமட் முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்
மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாடளாவிய ரீதியில் மீளவும்
வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது
318 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, எகிப்தில் இடம்பெற்றுள்ள மோதல்கள் குறித்து உலக நாடுகள் கவலை
வெளியிட்டுள்ளன. எகிப்திய தலைவர்கள் வன்முறைகளை நிறுத்த வேண்டுமென அமெரிக்க
இராஜங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை
ஆர்பாட்டக்காரர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின்
செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். மில்லியன் கணக்கான
மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து மொஹமட்
மூர்சியை, அந்த நாட்டு இராணுவத்தினர் பதவியில் இருந்து அகற்றியிருந்தனர்.
மொஹம்ட் மூர்சி உள்ளிட்ட முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் முக்கிய
உறுப்பினர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: