கெய்ரோ : எகிப்திய அதிபர் முர்ஸி ராணுவ புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட போது அமெரிக்க அதிபர் ஒபாமா எகிப்தில் தாம் யாருக்கும் சார்பான நிலை எடுக்க வில்லை என்று கூறியிருந்தற்கு மாற்றமாக முர்சியின் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா பண உதவி செய்துள்ளதை அல் ஜஸீரா ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பல்வேறு அமெரிக்க அரசின் ஆவணங்களின் மூலம் 2008 முதலே எகிப்தின் பல்வேறு குழுக்களுக்கு ஜனநாயகத்துக்கான உதவி எனும் பெயரில் அமெரிக்கா உதவி செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது

மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு சார்பான பல்வேறு சர்வதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவுக்கு எதிர்ப்பான இஸ்லாமியவாதிகள் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தனர். எனவே அரபு வசந்தத்தின் பின் நிகழ்ந்த இம்மாற்றத்தை விரும்பாத அமெரிக்கா இஸ்லாமியவாதிகளின் எதிர்ப்பாளர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளது.

முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க வன்முறையை தூண்டி விட்ட எகிப்தில் தேடப்படும் முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி, முஸ்லீம்களின் மசூதிகளை மூடி பிரச்சாரகர்களை பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த இஸ்லாமியவாதிகளுக்கு எதிரான அரசியல்வாதி என பல்வேறு நபர்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் தன் செல்வாக்கை தக்க வைத்து கொள்ளும் விதமாக வருடத்திற்கு 1.4 பில்லியன் டாலர்களை செலவு செய்யும் அமெரிக்கா 390 மில்லியனை ஜனநாயகத்துக்கான உதவி எனும் பெயரில் பல்வேறு அரசு நிறுவனங்களின் மூலம் என்.ஜி.ஓக்கள் மூலம் பல்வேறு நபர்களுக்கு வழங்குகிறது.

எகிப்தில் முபாரக் ஆட்சியின் போது புலனாய்வு துறையில் உயர் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்த அபிபி சாலிமன் முபாரக் காலத்திலேயே அமெரிக்காவில் அரசியல் அகதியாக புகலிடம் பெற்றவர். 2008 முதல் அவரின் அமைப்புக்கு அமெரிக்கா ஏராளமான நிதியுதவிகளை வழங்கி உள்ளது.

முர்ஸியின் சுதந்திர மற்றும் நீதிக்கான கட்சிக்கு எதிராக தன்னுடைய முக நூலில் பல்வேறு வன்முறை கருத்துகளை சாலிமன் வெளியிட்டு உள்ளார். முர்ஸியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தும் போது முதலில் அவர்களின் கால் முட்டியில் அடித்து துவம்சம் செய்யுமாறு தன் ஆதரவாளர்களை முர்சியின் அரசுக்கு எதிராக தூண்டி விட்டுள்ளார். மேலும் முர்சியின் ஆதரவாளர்கள் கெய்ரோவுக்கு செல்லும் போது பாதையில் பேரீத்தம் மரங்களை போட்டு தடை ஏற்படுத்துமாறு சாலைகளில் டீசல் மற்றும் வாயுக்களை தூவுமாறும் தன் ஆதரவாளர்களுக்கு அறிவுரை கூறியுள்ள சாலிமன் தடை காரணமாக முர்ஸி ஆதரவாளர்களின் வாகனங்கள் நிற்கும் போது அவ்வாகனங்களை தீ வைத்து கொளுத்துமாறும் கட்டளையிட்டுள்ளார்.

மேலும் முர்ஸிக்கு எதிர்ப்பான தேசிய பாதுகாப்பு முன்னணியின் பல்வேறு தலைவர்களுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்துள்ளது. தற்போது துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட எல் பராதியின் கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான் அப்துல் பத்தாஹ் எனும் பெண்ணின் அமைப்புக்கு ஏராளமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இப்பெண் தான் முர்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சாசனத்தை ஆதரித்த மசூதி இமாம்களை பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் என்று போர்கொடி தூக்கியவரும் சமீபத்திய தஹ்ரீர் சதுக்க போராட்டத்தில் முர்ஸிக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்றிணைத்தவர். சில வாரங்களுக்கு முன்னமேயே முர்ஸி ஜுன் 30 வரை தான் பதவியில் இருப்பார் என்று அப்துல் பத்தாஹ் கூறியது குறிப்பிடத்தக்கது.

முர்ஸிக்கு எதிராக எகிப்தின் கிறிஸ்தவர்களை ஒன்றிணைத்த அல் ஹயா கட்சியின் தலைவர் முனீர் 1.3 மில்லியன் டாலர்கள் அமெரிக்க அரசிடமிருந்து பெற்றிருக்கிறார். சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கான கட்சியின் தலைவர் எஸ்மத் அல் சதாத் உள்ளிட்ட முர்ஸிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெரும் பங்கு வகித்த பலர் அமெரிக்க அரசிடமிருந்து நிதியுதவிகளை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அரசின் இத்தகைய நிதியுதவி குறித்த சத்தாத் இப்ராஹிம் எனும் அரசியல் விமர்சகர் முர்ஸிக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்தால் தான் முர்ஸியின் நீக்கத்துக்கு எதிர்ப்பு இருக்காது என அமெரிக்கா கருதியதாலேயே இவ்வாறு நடந்து கொண்டதாக கூறினார். சத்தாத் இப்ராஹிமும் முர்ஸிக்கு எதிர்ப்பானவர் என்பதும் அமெரிக்க நிதியுதவி பெற்றவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

inneram.com

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts