அமெரிக்காவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண், உயிருடன் எழுந்தது மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதிகளவு மருந்து எடுத்து கொண்டதை தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள
மருத்துவமனையில் 2009ம் ஆண்டு கொலின் எஸ்.பர்ன்ஸ்(41) என்ற பெண்
அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் முறையாக பரிசோதனை நடத்தாத மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக பர்ன்ஸ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவரது உறவினர்களுடன் அனுமதியுடன் பர்ன்ஸின் உடல் பாகங்களை
அகற்ற மருத்துவர்கள் தயாரானர், அப்போது அவர் திடீரென கண்விழித்து உயிர்
பிழைத்தார்.
2 வாரங்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து
வீடு திரும்பினார். எனினும் 16 மாதங்கள் கழித்து அவர் தற்கொலை செய்து
கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பர்ன்ஸின் மூளையின் செயல்பாடு
குறித்து மருத்துவர்கள் பரிசோதிக்கத் தவறியதே இத்தவறுக்குக் காரணம் என்று
குற்றம் சாட்டப்பட்டது. இந்த செய்தி, பத்திரிகையாளர்கள் நடத்திய
புலனாய்வில் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து மருத்துவமனையின்
அஜாக்கிரதையான செயலை கண்டித்த அமெரிக்க மருத்துவத்துறை, மருத்துவமனை
நிர்வாகம் ரூ. 1.32 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு
செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.
இது குறித்து பர்ன்ஸின் தாய்
லுசில்லி கஸ் கூறுகையில், மருத்துவமனையில் என்ன தவறு நடந்தது என்பதை
மருத்துவர்கள் கடைசி வரை தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: