பாகிஸ்தானின் அபோதாபாத்தில் தங்கியிருந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க சீல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து அவர் பாகிஸ்தானில் இருந்தது எப்படி? எத்தனை ஆண்டுகளாக
தங்கியிருந்தார்? என்பது குறித்து விசாரிப்பதற்காக விசாரணை கமிஷன்
அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் ஐ.எஸ்.ஐ தலைவர் ஹமீத் குல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இவர் கூறுகையில், பின்லேடன் பாகிஸ்தான் எல்லைக்குள் பதுங்கி இருந்தது
தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், இது தங்களின் சாதனை தவிர தோல்வி இல்லை
என்றும் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்: