முஸ்ஸிம்
பெண்கள் அணியும் முகத்தை மூடிய அபாயா உடையை உடனடியாக இலங்கையின் சட்ட
ரீதியாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என
பொது பலசேன அமைப்பு அரசாங்கத்தை கோரியுள்ளமை மத சுதந்திரத்தின் மீது
கைவைக்கும் செயற்பாடு எனவும் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்
அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (09) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்ஸிம் பெண்கள் அணியும் முகத்தை மூடிய அபாயா உடையை உடனடியாக இலங்கையின்
சட்ட ரீதியாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தமது கவனத்தை முழுமையாக செலுத்த வேண்டும்
என என பொது பலசேன அமைப்பு அரசாங்கத்தை கோரியுள்ளது.
இதனை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. முஸ்ஸிம் பெண்கள்
குறித்த அபாயா அணிவது அவர்களுடைய மத கோட்பாடுகளை பிரதிபளிக்கின்றது.
குறித்த அபாயா அணிவதன் மூலம் பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகள் இடம்
பெறுவதாக அந்த அமைப்பு குற்றம் சட்டியுள்ளது.
அவ்வாறான
செயற்பாடுகள் இது வரை இடம்பெறவில்லை. பொது பலசேன என்ற இந்த இனவாத அமைப்பு
தொடர்ந்தும் முஸ்ஸிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி வருகின்றனர்.
ஆரம்பத்தில் முஸ்ஸிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். தற்போது
முஸ்ஸிம் பெண்கள் தமது மத கோட்பாடுகளுக்கு அமைவாக அணிகின்ற அபாயா உடையை
தடை செய்ய குறித்த இனவாத அமைப்பு முயற்சி செய்து வருகின்றனர்.
தொடர்ந்தும் முஸ்ஸிம்களை பொது பலசேன என்ற இந்த இனவாத அமைப்பு அடிமையாக்க முற்பட்டு வருகின்றது.
குறித்த செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பொது பலசேன என்ற இந்த இனவாத அமைப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும்.
எனவே குறித்த கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,
டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள ஊடக
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: