இஸ்லாமிய
ஷரீஆ சட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க
மற்றும் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரிடையே நேற்று கடும் வாக்குவாதம்
இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற
பாராளுமன்ற அமர்வின்போது சவூதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்படும் ஷரீஆ
சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டபோதே
அதற்கு அஸ்வர் எம்.பி. தனது கடும் எதிர்ப்பை வெ ளிப்படுத்தினார்.
சவூதி அரேபியாவில் நடைமுறையிலுள்ள ஷரீஆ சட்டம் மிலேச்சத்தனமானது. அங்கு
செல்லும் இலங்கையர்கள் இந்த சட்டத்தின் மூலம் கொலை செய்யப்படுகிறார்கள்.
எனவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை வேலைவாய்ப்புக்காக
அனுப்புவதை தடை செய்யும் வகையில் வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான்
பெரேரா சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என ரஞ்சன் ராமநாயக்க தனது
உரையின்போது குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட அஸ்வர்
எம்.பி., ஷரீஆ சட்டம் அல்லாஹ்வின் சட்டமாகும். அதுபற்றி விமர்சிக்க ரஞ்சன்
எம்.பி.க்கு அருகதையில்லை எனக் குறிப்பிட்டார்.
ரிஸானா
நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில்
நடைமுறைப்படுத்தப்படும் ஷரீஆ சட்டம் தொடர்பில் ஐ.தே.க. பாராளுமன்ற
உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: