இந்நாட்டு
மதங்களின் இனங்களின் அடையாளங்கள் என்ன என்பது அறியாமல் பொதுபல சேனா
இயக்கம் முஸ்லிம் பெண்களின் நிகாபை தடைசெய்யுமாறு குறிப்பிடுவதானது தனது
இனத்தை மத்த்தை உயர்ந்த்து எனக் காட்டுவதற்கும் னைய மதங்களை இனங்களை
இழிந்துரைப்பதற்குமேயாகும் என பெண்கள் உரிமைகளுக்கான அமைப்பின் செயலாளர் ஸமன்மலீ குணசிங்க குறிப்பிட்டார்.
இலங்கைக்கு உல்லாசப் பயணம் வருகைதருகின்ற பெண்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டிய இன்றைய நிலையில் கலகொடஅத்தே ஞானஸார தேர்ர் முஸ்லிம் பெண்களின் நிகாபை தடை செய்யுமாறு கோருவது மனித உரிமைகளை மட்டுமன்றி பெண்களின் உரிமைகளையும் மீறும் செயலாகும் என பெண்களின் உரிமைகளுக்கான அமைப்பு குறிப்பிடுகிறது.
மாற்று மத்த்தவர்களின் கலாச்சார மற்றும் அடையாளங்களுக்கு கைவைக்கும் இழிந்த செயலை விட்டும் ஞானஸார்ர் மீள வேண்டும் என்றும் குறிப்பிடுகின்ற அந்த அமைப்பானது மேலும்,
‘ஞானஸாரர் இந்த யோசனையை நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டு செய்வதாயின் அவர் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், நாட்டில் தற்போது பரவியிருக்கின்ற விபச்சார விடுதிகளை, போதைவஸ்து கடத்தல் மற்றும் சில அரசியலாளர்கள் செய்கின்ற அடாவடித்தனங்களுக்கு எதிராகக் போர்க்கொடி தூக்குவதே. முஸ்லிம் மாதரின் உடையினால் யாருக்கும் எத்தீங்கும் இல்லாத நிலையில் அவர்களின் ஆடையில் கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை. தற்போது நமது நாட்டுக்கு வருகைதருகின்ற பெண்கள் என்ன அசிங்கமாக வருகின்றார்கள்...? அரை நிர்வாணமாக அல்லவா நிற்கிறார்கள்? முஸ்லிம் பெண்கள் தங்களது விருப்பின்பேரில் நிகாபை நீக்கினாலும் அதில்கூட யாரும் தலையிட முடியாது. சில முஸ்லிம் நாடுகள் பெண்கள் தங்கள் அங்கங்களை முழுமையாக மறைக்காதவிடத்து அவர்களைக் கொலை செய்துள்ளன. தற்போது இலங்கையில் அதற்கு மாற்றமாக ஆடையின் ஒரு பகுதி அதிகமாக இருப்பதாக்க் கூறி அதனைத் தடை செய்ய முயல்கிறது.
இது அநீதியான செயற்பாடாகும். இங்கு முக்கிய தேவை என்னவென்றால் பெண்களின் ஆடையைக் களைவதல்ல. அவர்களுக்கு ஆடை அணிவிப்பதாகும். எனவே நாங்கள் ஞானஸார்ரிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தீமைகளுக்கு எதிராக எழுந்து நில்லுங்கள்.. மாறாக, முஸ்லிம் பெண்களின் உரிமைகளில் தலை யிட வேண்டாம்.’ எனவும் குறிப்பிட்டுள்ளது.
(கலைமகன் பைரூஸ்)

0 கருத்துகள்: