பொது
இடங்களில் முகங்களை மூடுவதைத் தடுக்கும் படி அரசாங்கத்தைக் கோரவுள்ளதாக
பொது பல சேனா அறிவித்துள்ளது. அவ்வாறு முகங்களை மூடிக்கொண்டு செல்வது
நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது எனும் போர்வையிலேயே
இவ்விடயம் முன் வைக்கப்படுகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக
அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலக போதைப்பொருள் விநியோகஸ்தரின்
சம்பவத்தையும் சுட்டிக்காட்டும் இவ்வமைப்பு மறைமுகமாக புர்கா அணிவதையே
குறிப்பிடுவதும், தேசிய பாதுகாப்புக்கு அவசியம் எனும் வகையில் புர்காவிற்கு
எதிரான தடையைக் கொண்டுவர முயற்சிப்பதும் தெளிவாகிறது என அவதானிகள்
தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்: