சவூதி அரபியாவில் உள்நாட்டு மக்களுக்கு வேலை
வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு
வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி 10 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும்
ஒருவர் (10:1) சவூதி அரேபியாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறு
மற்றும் சிறு தொழில்களிலும்கூட 10 சதவீதம் அந்நாட்டு
மக்களுக்கு ஒதுகீடு செய்ய வேண்டும்.
இந்த சட்டத்தால் அங்கு வேலை செய்யும் 2 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு அறிக்கை கூறியுள்ளது. இந்தியாவிலிருந்தும் பலர் அங்கு சென்று வேலை செய்து வருகின்றனர். இதில் அதிகமாக இந்தியாவின் கேரளாவிலிருந்து மட்டும் 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் சவூதியில் வேலை செய்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் முதல்வர் உம்மன் சாண்டி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'ஒரு நாட்டின் உள்நாட்டு கொள்கைகளில் நாம் தலையிட முடியாது. இருந்த போதிலும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை சிறிது காலம் ஒத்தி வைத்தால், வெளிநாட்டினருக்கு உதவியாக இருக்கும்.
இந்த கால நீட்டிப்பை வழங்க முறையீடு செய்யலாம்', என்று கூறியிருந்தார். சவூதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் ஆந்திர அரசும் கோரிக்கை வைத்துள்ளது.

0 கருத்துகள்: