பிரிட்டனில்
வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது ஆறு குழந்தைகளை தீயிட்டுக் கொளுத்திய
ஃபில்பாட்(Philpott) மீது நாட்டிங்ஹாம்(Nottingham) நீதிமன்றத்தில் விசாரணை
தொடங்கியுள்ளது. ஃபில்பாட் என்பவருக்கு இரண்டு மனைவிகளும், ஆறு
குழந்தைகளும் இருந்தது. இவர் சொத்துக்காக தனது ஆறு குழந்தைகளை கொன்று அந்த
பலியை தனது முதல் மனைவி மேரீடையின்(Mairead) மீது போட்டு விடலாம் என்று
தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.
அதன்படி இருவரும் சேர்ந்து அந்த குழந்தைகளை தீயிட்டு கொன்றுள்ளனர். ஆனால்
பொலிசார் தகுந்த சாட்சிகளுடன் இவர்களை பிடித்து நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தில் அரசு சட்டதரனி கொலை சம்பவம்
குறித்து ஃபில்போட்டிடம், உங்கள் முதல் மனைவி மேரீடை ஒரு அடிமையைப் போல்
நடத்தினீர்களா என்று கேட்டார். அதற்கு ஃபில்போட் அவரை அடிமையைப் போல நான்
நடத்தவில்லை என்று பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வருடம்
குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குத் தீ வைத்த சம்பவம் குறித்து
அவரிடம் கேட்டதற்கு, அவர் தான் குழந்தைகளை மிகவும் நேசித்தாகவும், அதனால்
அவர்களைத் தான் தீ வைத்துக் கொல்வதைத் தன்னால் நினைத்துக்கூடப் பார்க்க
முடியவில்லை என்று கூறினார்.
மேலும் காவலரின் பாதுகாப்பில்
வைக்கப்பட்டிருந்த அறையில் ஃபில்பாட் தான் இரண்டாவது மனைவியுடன் பேசிய
விடயங்களைப் பதிவு செய்து வைத்திருந்ததையும் பொலிசார் நீதிமன்றத்தில்
சமர்ப்பித்தனர். அது குறித்து கேள்விகளுக்கும் ஃபில்பாட் பதிலளித்தார்.
அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த ஃபில்பாட் விசாரணையின்பொழுது கண்ணீருடன் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: