ஜம்இய்யத்துல்
உலமா சபை உற்பத்தி பொருட்களில் வரிகளை அறவிடுகிறது. இது சட்டவிரோதமானது.
இதனால் ஜம்இய்யத்துல் உலமா சபை என்ற கப்பம் பெறும் நபர்களை உடனடியாக
கைதுசெய்யுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என சிங்கள ராவய
அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன
தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் காலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
அரசாங்கத்தில் கப்பம் பெறும் குழுவொன்று இருக்குமாயின் அரசாங்கத்தில்
உள்ளவர்களை கைதுசெய்ய வேண்டும். சாதாரணமாக நாடு ஒன்றில் வரிகளை அறவிடுவது
அரசாங்கமே. சாதாரண மக்கள் வரிகளை அறவிட முடியாது. நாம் வரிகளை அறவிட்டால்
அதற்கு பெயர் கப்பம். உலமா சபையினர் கப்பம் பெறும் நடவடிக்கைகளையே
மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்இய்யத்துல் உலமா சபை கப்பம் பெறும்
நடவடிக்கை போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்பு அனைத்து
பொருட்களையும் ஹலாக்கி விட்டுள்ளது. ஹலால் இலச்சினையை பெற ஒரு நிறுவனம்
குறைந்தது 1.5 லட்சம் ரூபாவை செலுத்த வேண்டும். இலங்கையில் உற்பத்தி
செய்யப்படும் 4 ஆயிரத்து 856 பொருட்களில் ஹலால் சான்றிதழ் உள்ளது எனவும்
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: