
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் சான்றிதழை ஒத்த ஹராம் சான்றிதழ்களும் சில பொருட்களுக்கு ஒட்டப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.
மேலோட்டமாகப் பார்க்கும் போது ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழ் போன்றே
தோற்றமளிக்கும் இச்சான்றிதல் ஹலால் என்பதற்கு முற்றிலும் எதிர் கருத்ததான
ஹராம் என்ற சொல்லை தாங்கி வருவதை பயன் படுத்துவதில் பாரிய பிரச்சினை உண்டு.
அதாவது உற்பத்தி நிறுவனமே இது அசுத்தமானது எனக் கூறுகின்ற நிலையில்
முஸ்லிம்கள் மட்டுமல்ல சிந்திக்கக் கூடிய எந்த ஒரு மனிதனும் அதனை வாங்குவது
பொருத்தமற்றது.எச்சரிக்கையாக இருக்கும் படி பலர் வேண்டிக் கொண்டனர்.
இதே விதமாக கண்டி நகரில் ஒரு சில தேனீர்கடைகளில் 'ஹலால் உணவு இல்லை' என்ற அறிவித்தல் (ஹலால் கேம நெத்த) போடப்பட்டுள்ளது.
இதன் கருத்து சுத்தமான உணவு கிடையாது என்பது மொழி புரிந்தவர்களுக்குத்
தெரியும். எனவே அவர்கள் எவ்வளவு பழுதான உணவை விற்றாலும் அது தண்டனைக் குறிய
குற்றமாகாது.ஏனெனில் அறிவித்தல் போடப்பட்டுள்ளது.
அதேபோல் ஹராம் என்ற இலஞ்சிணை பொறித்த உணவும் எவ்வளவு பழுதடைந்திருந்தாலும் சட்டரீதியல் குற்றம் காணமுடியாது.
எனவே இப்படியானவற்றை கொள்வனவு செய்வதில் சற்று தெளிவு தேவை.
(நன்றி jaffnamuslim.com)
0 கருத்துகள்: